மும்பையில் ஞாயிறு அமைப்பின் கவியரங்கம்

  ஞாயிறு இராமசாமி அவர்களால் நடத்தப் பெறும் ஞாயிறு அமைப்பின் கவியரங்கம், மும்பை, செம்பூர் மகளிர் சங்க(மகிலா சமாசம்) அரங்கில் மாசி 17, 2046 – 01/03/15 அன்று மாலை 6.மணிக்கு நடைபெற்றது.   கவியரங்கத்திற்குக்  கவிஞர் ஆதிரா முல்லை தலைமை வகித்தார்.  இதில் மும்பைத் தமிழ்ச்சங்கத் தலைவர், செயலாளர்  முதலான 13 கவிஞர்கள் கவிதை படித்தனர்.   கவிஞர் பரணி அவர்களின் கவிதை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று பரிசும் சான்றிதழும் வழங்கப் பெற்றன.  கவியரங்கின் முடிவில் ஞாயிறு இராமசாமி அவர்களால் தமிழிசைப் பாடல்களும்…

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! – கவிஞர் தணிகைச்செல்வன்

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! எங்கேயும் நான் தமிழனாக இல்லை! நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா? என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானியிடம்…

சிறுநண்டு – உருத்திரமூர்த்தியின் தமிழிசைப்பாடல்

சிறுநண்டு – தமிழிசைப்பாடல் சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சிலவேளை இதை வந்து கடல் கொண்டு போகும். கறிசோறு பொதியோடு தருகின்ற போதும் கடல் மீதில் இவள் கொண்ட பயம் ஒன்று காணும். வெறுவான வெளி மீது மழை வந்து சீறும் வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும். நெறி மாறுபட நூறு சுழி வந்து சூழும் நிலையான தரை நீரில் இலை போல் ஈடாடும். இருளோடு வெளியேறி வலை வீசினாலும் இயலாது தர வென்று கடல் கூறல் ஆகும்….