தமிழ் இலக்கியமன்றம், புழுதிவாக்கம் – கவியரங்கமும் கருத்தரங்கமும்

   வைகாசி 09, 2047 / மே 22,2016 கருத்தரங்கத் தலைமை : கவிஞர் அமரசிகாமணி கருத்தரங்கச்சிறப்புரை : கவிமாமணி குடந்தையான் அனைவரும் வருக! – த.மகாராசன்

ஏறுதழுவல் அன்றும் இன்றும் – சுப.வேல்முருகன்

ஏறுதழுவல் அன்றும் இன்றும்   பழந்தமிழர் வாழ்க்கை காதலையும் வீரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இக்கருத்திற்கேற்ப பழந்தமிழகத்தில் நடைபெற்ற வீர விளையாட்டுகளுள் ஏறுதழுவுதலும் ஒன்றாக அமைந்துள்ளது; இவ்விளையாட்டை மேற்கொள்ளும் ஆடவரின் வீரத்தையும், காதலையும் புலப்படுத்துகிறது.   கட்டின்றித் திரியும் வலிய காளையினை ஒரு வீரன் அடக்கும் செயல் ஏறு தழுவல் என்று கூறப்படுகிறது. வீறுமிக்க காளையினை வலியடக்கி அதனை அகப்படுத்துதல் என்னும் கருத்தில் இதனை ‘ஏறுகோடல்’ என்றும் குறிப்பிடுகின்றனர். ஏற்றினை அடக்கும் போது அதனால் ஏற்படும் இடர்களுக்கு அஞ்சாது அதன் மீது பாய்ந்தேறி அடக்குவதினால் இச்செயல்…