தாய்மை – காரைக்குடி பாத்திமா அமீது

தாய்மை  இறைவனைக் காண நினைத்தேன் உன்திருமுகம் காணும் முன்பாக உணரத் துடித்தேன் சொர்க்கமதை உன்னிரு  பாதங்களில் பணியும் முன்பாக. எழுத சொற்கள் இல்லையம்மா வளர்த்த விதம் சொல்வதற்கு பாடிடச் சொற்கள் கிடைக்கவில்லை பாடுபட்டு படிக்க வைத்ததற்கு! விறகடுப்பின் புகையில்நீ வெந்துஎம் பசிபோக்கினாய்! வியர்வை நீரூற்றி எங்களை வளர்த்து ஆளாக்கினாய்! பட்டங்கள் பெறவைத்துப் பார்த்துப் பூரித்துப்போனாய்! வெற்றிகள் பலகொடுத்து வேதனைகளை விரட்டினாய்! கவிதைகளால் தாலாட்டி கண்ணுறங்கச் செய்தாய்! வருணனைகள் பலதந்து என்னுள் வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்! பாரங்களை இறக்கிட உன் பாதங்கள் வேண்டும் இனிதே தூங்கியெழ உன் மடிவேண்டும் ஒரு…

நான் – காரைக்குடி பாத்திமா அமீத்து

    நான் ஏதோசில கற்பனைகள் என்னுள்ளே எப்போதும்! மனிதவாழ்வே வேண்டா மரமாய்ப்பிறக்க வேண்டும்நான்! இளைப்பாறநிழல் கொடுத்து இனியகனிகள் அளித்து, பறவைகள் கூடமைத்துவாழ பாதுகாப்பளித்திட வேண்டும்நான்! நீராகநான்மாறி உயிர்களின் வேட்கைதீர்த்திட வேண்டும்நான்! காற்றாகமாறி அனைவரின் மூச்சாக வேண்டும்நான்! கல்லாகமாறி உளியால் சிலையாக வேண்டும்நான்! அலையாகமாறிப் பெருங்கடலில் சங்கமிக்க வேண்டும்நான்! மலராய்ப் பிறந்து மணம்தந்து உதிரவேண்டும்நான்! நிலவாய் உதித்து வளர்ந்து தேயவேண்டும்நான்! கடவுளோர்நாள் வந்தென்னிடம் கண்முன்னே தோன்றினால், ஈசலாகப் பிறந்து ஓர்நாளில் பிறந்துமடியும் வரமொன்று கேட்பேன் நான்…..நான்! நான், காரைக்குடி பாத்திமா அமீத்து, சார்சா தரவு…