புலவர் குழந்தையின் இராவண காவியம்: பாயிரம், நூற்பயன் 31-37

(இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 26-30 தொடர்ச்சி) இராவண காவியம்: பாயிரம் 31-37 31.கொடுமை யாமனுக் கோதுடை யாரியக் கடிமை வாழ்வி னழுந்துவார்க் கென்செயும்? அடிமை வாழ்வி னகன்று விடுதலை அடைய மேவுந் தமிழர்க்கி தாகுமே. 32.தமிழர் தாழ்வு தனையெடுத் தோதியே தமிழர் வாழ்வு தனைநிலை நாட்டலான் தமிழ ரென்னு முணர்வு தலைப்படும் தமிழர் யாரும் தலைக்கொளு வாரரோ. ++ மேவுதல்–விரும்புதல் ++ 33.கோதி லாத குழந்தை குதலையைத் தீது நன்றெனத் தேர்வரோ பெற்றவர்? ஈது நந்தமி ழின்கதை யேயிதை ஓது நாவனு முங்கள்…

அசோகர் காலமே வள்ளுவர் காலம்! – சி.இலக்குவனார்

அசோகர் காலமே வள்ளுவர் காலம்   வள்ளுவர் காலம் சங்கக் காலம் என்றோம். சங்கக் காலப் புலவர்களில் பலர் இவருடைய திருக்குறளை எடுத்தாண்டுள்ளார். மணிமேகலையாசிரியர் சாத்தனார் “தெய்வம் தொழான் கொழுநன் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை என்ற பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்” என்று கூறுகின்றார். இதில் வள்ளுவர் மொழியை எடுத்தாண்டு அவரைப் பொய்யில் புலவர் என்று பாராட்டுவதையும் காண்கின்றோம். அதனால் வள்ளுவர் சாத்தனார் காலத்திற்கு முற்பட்டவர் என்று அறிகின்றோம். சாத்தனார் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும்…

அசோகர் காலத்திற்குப் பிற்பட்டதே சமற்கிருதம் – வழிப்போக்கன்

‘சமசுகிருதம் முதலில் தோன்றியதா…அல்லது தமிழ் முதலில் தோன்றியதா’ – நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்து கொள்ள முடியாது. சரி…இப்பொழுது பதிவுக்குச் செல்வோம்.    இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்று கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் சோன்சும் மாக்சு…

காலந்தோறும் “தமிழ்” – சொல்லாட்சி 50 – 82

  (வைகாசி 18, 2045 / 01 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) 50. கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான்நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை,      பதிகம் 24-25   51.  மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனனென் –  சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, பதிகம்  97-98     52. தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய் – சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை, ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்தகாதை, 139   53. தண்தமிழ் வினைஞர் தம்மொடு கூடிக் கொண்டுஇனிது…

தொல்காப்பியரின் காலத்தை அறிவிக்க வேண்டும்! – ஆரா

  தமிழின் தொன்மையை மீட்க ஒரு கோரிக்கை – இலக்குவனார் திருவள்ளுவன்     உலகின் தொன்மையான முதல் மொழியான தமிழில் கிடைத்துள்ள முதல் நூல்  தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம்.தமிழர்களின் வாழ்வியல், முதல்மொழியாம் தமிழின் இலக்கணம் என்று சொல்லும் தொல்காப்பியரின் காலத்தை முன்னிறுத்தி விவாதங்கள் சூடாகியிருக்கின்றன. தாவரங்களுக்கு  உயிர் உண்டு எனக் கண்டறிந்ததைத் தொல்காப்பியர், தம் முன்னோர் கூறியதாகக் கூறி இருப்பார். தொல்காப்பியருக்கும் முன்னோரே  இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் தமிழரின் மதிநுட்பத்திற்கு வேறு சான்று தேவையில்லை. இப்படிப்பட்ட தொல்காப்பியரை,, தமிழகம் முழுமையான அளவில் முக்கியபத்துவப்படுத்தவில்லை…