கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12 : அன்றே சொன்னார்கள் 50 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 11- தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 12 மிகச் சிறந்த கட்டட அமைப்பிற்குச் சான்றாக நெடுநல்வாடை இலக்கியம் தெரிவிக்கும் கருத்துகளைப் பார்க்கும் முன்னர், வீடுகளோடு தொடர்புடைய செடி, கொடி, மரம், கால்நடைகள், பறவைகள் வளர்ப்பு குறித்துச் சிறிது பார்ப்போம்.வீடுகள் கட்டட அறிவியலுக்கு எடுத்துக்காட்டானவை. எனினும் மரம், செடி, கொடிகளையும்    பறவையினங்களையும் விலங்கினங்களையும் வளர்க்கும் தோட்ட அறிவியல், பறவையியல், விலங்கியல் முதலான பிற அறிவியலுக்கும் ஏற்பவே வீடுகள் அமைக்கப்பட்டன. எனவே, அவை குறித்து  வீடுகளின் தொடர்ச்சியாகக்…

கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2: அன்றே சொன்னார்கள் 42 – இலக்குவனார் திருவள்ளுவன்

(கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ – 1  தொடர்ச்சி) கட்டட வகைகளும் அறிவியல் அன்றோ -2 பல்வேறு வகையான வீடுகள் இருந்தமையை முதலில் பார்த்தோம். சிறந்த நகர அமைப்பும் உயர்ந்த ஊரமைப்பும் கொண்டிருந்த நகரங்களிலும் ஊர்களிலும் அமைந்த வீடுகள் வளமை மிகுந்ததாகவும் நன்முறையிலும் இருந்தமை பல பாடல்கள் மூலம் தெரியவருகின்றன. பொதுவாக மனை என்பது வீட்டையும் வீட்டின் முன்புறம் உள்ள முற்றம், பின்புறம் உள்ள கொல்லை, சுற்றி உள்ள தோட்டம் ஆகியவற்றையும் இவ்வீட்டுப் பகுதி அமைந்துள்ள பொழிலையும் சேர்ந்த நிலப்பகுதியையும் குறிக்கின்றது. மனை என்பது புலவர்களால் பல…

பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் – அன்றே சொன்னார்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்

பொற்காசுகளால் பொலிந்த தமிழகம் நாணயங்கள்  பயன்படுத்தும் காலம் வந்தபொழுது மாழைகளால் – உலோகங்களால் – காசுகள் உருவாக்கிப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டது. (இ)லிதியன் மக்கள்தாம் முதன் முதலில் தங்கத்திலும் வெள்ளியிலும் காசுகள் அடித்ததாக கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எரொதத்தசு (Herodotus) என்னும் கிரேக்க  வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார். எனினும் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்குத் தமிழ்நாட்டில் பொற்காசுகள் மிகுதியாகப் பயன்பாட்டில் இருந்துள்ளன. மக்களுக்கு உவமையாகக் கூறும் அளவிற்கு அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டில் இருந்துள்ளமை அக்கால மாழை (உலோக)ப் பயன்பாட்டையும் செல்வச் செழிப்பையும் நமக்கு…

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!

(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி நெஞ்சே தொடர்ந்து வருக! ஆங்கு வீசும் தென்றற்காற்று மலர் பறிக்க வல்லானொருவன், மலரைப் பறிக்கத் தன் கைக் கோலால் கிளைகளை அலைக்கழித்தல்போல், மராமரத்துக் கிளைகளை, அலைக்கழித்து, அம்மலர்களை வழிச் செல்லும் மக்களின் தலை முடியில் சென்று உதிருமாறு செய்யும். நெஞ்சே! காற்றின் செயல் கொடுமை வாய்ந்ததாகத் தோன்றினும் அக்காற்று இல்லையேல் அம்மலர்கள் மலர்ந்தும் பயனிழந்து போயிருக்கும். அக்காற்று வீசியதால் அதன் மணம் காற்றில் பரவிப் பயன் பெற்றது….