வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்!

வவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்! தமிழர் தேசத்தின் இதயமாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்திச் சிறப்பிக்கின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல்,  வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லச் சூழலில், வவுனியா மாவட்ட மக்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்குக் கடைப்பிடிக்கப்படவுள்ளது.  குறித்த…

தமிழர்களின் சிக்கல்களை அறியாதவர் வடக்கு ஆளுநர்!

தமிழர்களின் சிக்கல்களை அறியாதவர் வடக்கு ஆளுநர்! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு!  வடக்குமாகாண ஆளுநர் தமிழ் மொழியைப் பேச மட்டும் தெரிந்து கொண்டுள்ளாரே தவிர, தமிழர்களின் சிக்கல்கள் தொடர்பான உண்மைகளைத் தெரிந்து கொள்ளாதவராக இருக்கிறார். இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் இணைப்பாளர் இலீலாதேவி ஆனந்த நடராசா குற்றம்சாட்டினார்.    கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த  பிப்பிரவரி மாதம் 20ஆம்  நாள்  முதல் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றிலில் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை 100…

இயன்றவரை உதவுங்கள்!

இயன்றவரை உதவுங்கள்!  இனப்படுகொலைப்போரில் இந்த  உடன்பிறந்தாளுக்கு ஓர் ஆண், ஓரு பெண் என  இரு குழந்தைகள் . இவருக்குத் தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும் எனவும், தனக்கு ஆடு வளர்ப்பு செய்ய பணம் தேவை  எனவும் பண உதவி செய்ய யாரும் முன் வந்தால் தன் இரு குழந்தைகளையும். தன்னால் நல்ல கல்வி கொடுத்து வளர்த்து எடுக்க முடியும் என்றும் தெரிவித்து உதவி வேண்டுகிறார். உதவும் உள்ளங்கள் உதவுங்கள்! தொடர்பு இலக்கம்:-009477 549 9988 சிறீகாந்த  சீவா கிளிநொச்சி…

எதிர்காலத்திற்கான பாதை அமைப்பு அன்பளிப்பு

  கிளிநொச்சி  சிறப்புத் தேவைகளுக்குட்பட்டோர் வலையமைப்புக்கு  இலண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பான  எதிர்காலத்திற்கான பாதை(PATH TO THE FUTURE) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாகப் பல கட்டங்களாக 326,815 உரூபாய் பெறுமதியான பொருட்கள்- நிதி  முதலியன அன்பளிப்பு.    கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரம்  பகுதியில் சிறப்புத் தேவைக்குரிய மாற்றுவலுவுடைய மற்றும் முற்றிலும் இயங்க முடியாத பிள்ளைகள் எனத் தொடக்கக்கட்டமாக 14 பிள்ளைகளுடன் இவ்வமைப்பு இயங்கி வருகின்றது. இவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி இல்லப் பிள்ளைகளைப் பேணுவதில் பல  இன்னல்களை எதிர்நோக்கி வருவதாகவும்…

பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை

பெருஞ்சிக்கல் உருவெடுக்கும் புத்தர் சிலை வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் படைத்தரப்பினரது செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் இதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உறுதுணை புரிந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்றசெய்தியானது பல்வேறு வகைகளில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வருகின்றது. (இனப்படுகொலைப்) போர் நிகழ்ந்த காலத்தை விடவும் தற்போது பல பகுதிகளிலும் திடீர் திடீரென புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன. வவுனியாவிலிருந்து ‘ஏ–9’ வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கிச்…

சிங்கள வதைமுகாம் கொடுமைகள் 03 – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா

இர.சிறீகந்தராசா: நீங்கள் குறிப்பிட்ட அந்தக் கிளிநொச்சிக் கமுக்க (இரகசிய) முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? து.வரதராசா:: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய ஊர்தியில் வவுனியா மருத்துவமனைக்குப் பண்டுவத்துக்காக அனுப்புவதாகத்தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கி விடப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பேருந்திலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சிறிது நேரத்தில் திரும்பி…

தமிழினியின் இரு நூல்கள் வெளியீடு, கிளிநொச்சி

தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும் ! தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் மறைந்த தமிழினி அவர்கள் எழுதிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, பங்குனி 06, 2047 / மார்ச்சு 19, 2016 சனிக்கிழமை அன்று கிளிநொச்சியில் கூட்டுறவாளர் கல்லூரி மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. வெளியீட்டு உரையை மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் நிகழ்த்துகின்றார். ‘தமிழினியின் சமுகப்பொறுப்பும், தமிழினிகளுக்கான சமுகத்தின் பொறுப்பும்’ எனும் தலைப்பில் முன்னாள் போராளி தங்கராசா சுதாகரன் உரையாற்றுகின்றார். முன்னாள் போராளி யாழ்நிதி, ‘ஒரு…