கண்ணியக் காவலர் குலோத்துங்கன் – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழகம் மறக்கக்கூடாதவர்களுள் ஒருவர்!  தமிழக மக்கள், அரசியல் துறையில், இலக்கிய உலகில், கலைப்பணியில், என வெவ்வேறு வகைப்பாடுகளில் என்றும் நினைவில் கொள்ள வேண்டிய தகைமையாளர்கள் பலர் உள்ளனர். அத்தகையோருள் குறிப்பிடத்தக்க ஆன்றோர் கண்ணியம் ஆ.கோ.குலோத்துங்கன் ஐயா அவர்கள்.  “அன்று குலோத்துங்கனுக்காகக் கலிங்கத்துப்பரணி பாடினார் செயங்கொண்டார். இன்று செயங்கொண்டத்தில் குலோத்துங்கன் தமிழ்ப்பரணி பாடுகிறார். எழுத்துத் துறையில் நாளை ஒரு வேந்தனாகத் திகழ்வார்” என்று பேரறிஞர் அண்ணா இவரின் எழுத்துப்பணியைப் பாராட்டி உள்ளதே இவரின் சிறப்பினை அடையாளப்படுத்தும்.   தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர் தொழிலாளர்களின் உற்ற தோழனாக,…

கண்ணியம் ஐம்பெரும் விழா

 மாமன்னன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1000 ஆவது ஆண்டுவிழா கண்ணியம் 45 ஆவது ஆண்டுவிழா கவிதைப்போட்டி – பரிசு வழங்கும் விழா போட்டி நடுவர்களைச் சிறப்பிக்கும் விழா நூல் வெளியீட்டு விழா புரட்டாசி 09, 2046 / செப். 26, 2015 பிற்பகல் 3.00 மாம்பலம் ஆ.சந்திரசேகர் திருமண மண்டபம், மேற்கு மாம்பலம், சென்னை