அகநானூற்றில்  ஊர்கள் : 5/7 – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 4/7 இன் தொடர்ச்சி) அகநானூற்றில்  ஊர்கள் : 5/7 கானல்அம்பெருந்துறை                 தித்தன் வெளியன் என்ற அரசன் ஆண்டது இவ்வூராகும். இஃது அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெருந்துறை என்னும் பட்டினத்துக்கு உரியது. பிண்டன் நன்னனை வென்று வாகை சூடிய இடமாக திகழ்வதனை,                 “……..தித்தன் வெளியன்                 இரங்கு நீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்துறை” (அகநானூறு152, 210, 280, 300) என்ற அடிகள் மூலம் அறியலாகிறது.   குடந்தை                 வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழ மன்னரின் குடந்தை என்பதை,…

பொதுத் தேர்வும் (நீட்/NEET)இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்

பொதுத் தேர்வும் (நீட்/NEET) இளந்தளிர் அனிதாவின் இழப்பும் – அமெரிக்கத் தமிழர்களின் கண்ணோட்டம்     அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் எனும் சிற்றூரில் கூலித் தொழிலாளியான திரு.சண்முகம் அவர்களின் குழந்தை அனிதா ‘நீட் (NEET)’ எனப்படும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வினால் தனது வாழ்நாள் கனவான மருத்துவக் கல்வியை இழந்தார். முறையான மருத்துவச் சேவை கிடைக்காததால் தனது சிறு வயதிலேயே தாயை இழந்தார் மாணவி அனிதா. இப்பேரிழப்பு தந்த வலியால், தான் மருத்துவராகி தனது சிற்றூர் மக்களுக்கு உதவ வேண்டுமென்ற உயரிய குறிக்கோளுடன் தன்…

அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது? – இலக்குவனார் திருவள்ளுவன்

அனிதா படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை என்ன? எப்பொழுது?  ஒரு பூ, மலரும் முன்னே கருகிவிட்டது! நனவாக்கப்பட வேண்டிய கனவு சிதைக்கப்பட்டு விட்டது! மருத்துப்பணி ஆற்ற ஆசைப்பட்டதற்கு மரணம் பரிசளிக்கப்பட்டது! மத்திய ஆளுங்கட்சியின் ஒடு்க்குமுறை கொள்கையும் அதற்கேற்பத் தாளமிடும் அதிகாரப் பிரிவினரும்  உரிமையைக் கோர வழியற்ற மாநில அரசும் இணைந்து வாழ வேண்டிய இளம் பிஞ்சை இவ்வுலகத்திலிருந்தே அகற்றிவிட்டனர்.  அரியலூர் மாவட்டம் செந்துறை  அருகே  உள்ள குழுமூரில் சண்முகம் என்னும் மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளாகப் பிறந்து மருத்துவராக ஆசைப்பட்டது தவறா? அதற்காகத் தளராமல்படித்தது தவறா? …