கூடா நட்பு -தமிழ் சிவா

கூடா நட்பு ஆங்கிலப் புத்தாண்டை அமைவுறக் கொண்டாட அடுத்த நாட்டுக்குப் போகும் அ“று”ந்தகையே! அரிசனர் வீட்டிலே அரிசிச் சோறுண்டால் ஆகுமோ அனைவரும் இணைதான் என்றே? முட்டிலாக் காவலில் கட்டினில் உறங்கிய சுரங்கக் கோப்புகள் பிள்ளைக் கரிக்குச்சியோ? வெட்டிய வெளிச்சமும் திட்டிய வாய்களும் எட்டியாய் இருந்த இணக்கமும் இன்று வெற்றிலைக் காம்பாய் ஒட்டி இருப்பது வெட்டி எறிய அல்லால் வேறெதற்கு? -தமிழ் சிவா

திருக்குறள் அறுசொல் உரை – 083. கூடா நட்பு: வெ. அரங்கராசன்

(அதிகாரம் 082. தீ நட்பு தொடர்ச்சி) 02. பொருள் பால் 11. நட்பு இயல் அதிகாரம் 083. கூடா நட்பு  கூடாத மனங்களின் கூடாத போலிமை நட்போடு கூடாமை. சீர்இடம் காணின், எறிதற்குப் பட்டடை,    நேரா நிரந்தவர் நட்பு.          மனம்கூடா நண்பர், வாய்ப்புவரின்,      துயரம் செய்வார்க்கும் துணைஆவார்.     இனம்போன்(று) இனம்அல்லார் கேண்மை, மகளிர்    மனம்போன்று, வேறு படும்          போலிமை நண்பர்தம் நட்பும்,          விலைமகளிர் மனம்போல் மாறுபடும்.   பலநல்ல கற்றக்…