மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

: மறவோம் கொடுந்துயரத்தை! தவறோம் பழிதீர்க்க! பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (திருவள்ளுவர், திருக்குறள் 487)    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் தமிழ்நாட்டுடன் இணைந்திருந்த நிலப்பகுதி, பெருங்கடல்கோள்களால் தனித்தீவாக மாறிய நிலப்பகுதி, அதுவே இலங்கை என்றும் ஈழம் என்றும் அழைக்கப்பெறும் தமிழர்க்கான நிலப்பகுதி. இங்கோ சாதி வேறுபாடுகளையும் உயர்வு தாழ்வுகளையும் கற்பித்த ஆரியச் சமயத்தால் அழிவினைச் சந்தித்தது தமிழகம். அங்கோ வந்தவர்க்கு அடைக்கலம் கொடுத்ததால், அருள்நெறி போற்றும் புத்தச் சமத்தினரின் இன வெறியால் சிங்களம் வளர்ந்து ஆதிக்கம் செலுத்தித்…

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

நெஞ்சம் பதைபதைத்தது, இன்றும் அடங்கவில்லை! கொடுவினையில், சதிவலையில் இறந்தவர்களை நினைக்கும்பொழுது தீவினையரை மறந்துவிடுவோமோ! கொலைக்குற்றவாளிகளுக்குக் கடுந்தண்டனை  கிடைக்க வேண்டாவா? அன்றுதானே நம் மனம் ஆறுதல் அடையும்!  இறந்தவர்களை நினைவுகூர்வோம்! இருப்பவர்களுக்குத் துணை நிற்போம்! இறந்தவர்கள் கனவை நனவாக்குவோம்! இருப்பவர்கள் வாழ்வை வளமாக்குவோம்! அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். (திருவள்ளுவர், திருக்குறள் 625) – இலக்குவனார் திருவள்ளுவன்