(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10.  தொடர்ச்சி) மெய்யறம் மாணவரியல் 11. கொலை விலக்கல் கொலையுயிர் தனையத னிலையினின் றொழித்தல். கொலை என்பது உயிரினை உடலில் இருந்து நீக்குதல் ஆகும். வாழு முயிர்நிதம் வருந்த வதைத்தல். வாழுகின்ற உயிர் வருந்துமாறு கொடுமைப்படுத்துவதும் கொலை ஆகும். அச்செய றூண்டுத லச்செயற் குதவுதல். கொலை செய்வதைத் தூண்டுவதும் கொலை செய்வதற்கு உதவுவதும் கொலை ஆகும். இயலு மிடத்தச் செயலைத் தடாமை. நம்மால் முடியும் போது ஒரு கொலையினைத் தடுக்காவிடில் அதுவும் கொலையே. படுமுயி ரறிவுபோற் படிப்படி கொடிததாம். கொலை…