(பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 24 4. பிசிராந்தையார்  ஒரு நாட்டிற்கு வாழ்வளிக்கும் தலை சிறந்த செல்வம் அந்நாட்டின் மண்ணும் மலையும் அல்ல; ஆறும் அடவியும் அல்ல. அந்நாட்டின் அழியாப் பெருஞ் செல்வம் அமிழ்தொழுகும் கனிவாய்க் குழந்தைகளே ஆம். வருங்கால உலகைப் படைக்கும் தெய்வங்களல்லரோ அச் செல்வச் சிறார்கள்? இவ்வுண்மையை நாடாளும் தலைவனாகிய பாண்டிய மன்னன் உணர்ந்திருந்தான்; தான் உணர்ந்ததோடன்றித் தான் உணர்ந்த அவ்வுணர்வைத் தமிழிலக்கியம் உள்ள வரை அதைக் கற்பார் உணர்ந்து பயன் பெறுமாறு சொல்லோவியமாகவும்…