திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 31 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் (திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்ப்போம்.)  31 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: கல்வி, குறள் எண்:397) கற்றவனுக்கு எல்லா நாடும் ஊரும் தன் நாடாகவும் ஊராகவும் திகழும். பிறகு ஏன் சாகும்வரை கற்காமல் இருக்கிறான் எனத் திருவள்ளுவர் கேட்கிறார். “கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு” என்கிறார் ஒளவையார்(மூதுரை) கற்றவரை அவர் நாட்டு ஆள்வோரும் சிறப்பிப்பர். அவர் செல்லும் நாடுகளிலும் மதித்துப் போற்றுவர். ஆனால் ஆட்சித் தலைவர்க்கு உள்நாட்டில் இருக்கும் மதிப்பு அயல்நாடுகளில் இருப்பது இல்லை. கற்றவர் எந்த நாட்டிற்குச்…

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? – க.சச்சிதானந்தன்

காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்?   பிள்ளை: காக்கையாரே காக்கையாரே எங்கே போனீர்? காக்கை: காணாத இடமெல்லாம் காணப் போனேன் கண்டு வந்த புதினங்கள் சொல்லக்கேளும் செட்டியார் வீட்டிலே கலியாணம் சிவனார் கோயில் விழாக்கோலம் மேரி வீட்டிலே கொண்டாட்டம் மீன் பிடித்துறையிலே சனக்கூட்டம் கண்டிப் பக்கம் குளிரோ கடுமை காங்கேசன்துறையில் வெயிலோ கொடுமை பிள்ளை: அக்கா, அம்மா, அப்பா அவர்கள் சுகமா? காக்கை: பொங்கலன்று வருவாராம் புத்தகம் வாங்கி வருவாராம் பந்தும் வாங்கி வருவாராம் பாவை உமக்குத் தருவாராம் மிகவும் நல்லாய்ப் படியென்று கடிதம்…