சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4) – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (4) வடிவச் சுருக்கத்திற்கு வழிகாட்டி   பல நேர்வுகளில் கலைச் சொற்கள் சுருக்கமாகவும் செறிவாகவும்  இல்லாமல் தொடராக அமைந்து உள்ளன. எனவே, எளிமை கருதிப் பலரும் அயற்சொல் பயன்பாட்டில் தங்களை இணைத்துக் கொள்கின்றனர். சொல் விளக்கம் என்பது வேறு; கலைச் சொல் என்பது வேறு என்பதைப் புரிந்து கொண்டு கலைச்சொல் காணுநர் சுருங்கிய கலைச் சொல் வடிவங்களைக்காண்பதில் நாட்டம் செலுத்த  இவ்வாய்வு உதவும் என்பதில் ஐயமில்லை. தமிழ் நடைக்கு உந்துதல்  …

சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) – இலக்குவனார் திருவள்ளுவன்

(சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – தொடர்ச்சி) சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (3) அகச்சிக்கல்களும் புறச்சிக்கல்களும்    மொழி பெயர்ப்பில் நாட்டம் உடையோர் குறைவாகவும் சொல்லாக்கத்தில் ஈடுபாடு காட்டுநர்கள் அவர்களில் குறைவாகவும் உள்ளனர். அயலெழுத்தும் அயற்சொல்லும் இன்றி எழுத வேண்டும் என்னும் உணர்வும் தமிழ்வேட்பும் அற்ற தமிழ் முனைவர்களைத்தான் இக்காலக்கல்வி முறை உருவாக்கி உள்ளது. பிழையின்றி எழுதுநரையும் காண இயலவில்லை. எனவே, ஆய்வுத் துணைவரை நாடுவதில் பெரும் சிக்கல் எழுந்தது; சிலரைக்கருதிப்பார்த்து, எண்ணஓட்டமும் கருத்தோட்டமும் ஆய்வுநோக்கிற்கு ஒத்து வராமையால் கூடியவரை உடனிருந்து ஒத்துழைப்பவரையே நாடும்…