இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12 –  சி.இலக்குவனார்

(இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  11–  தொடர்ச்சி)   இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  12 5.அரசு நாடு நல்லமைதிபெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசமுறை சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் சிறப்பியல்பைக் கூற வந்த திருவள்ளுவர், “ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே வேந்து அமைவு இல்லாத நாடு” (குறள்.740) என்று திருவாய் மலர்ந்தருளினார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே   மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்   அதனால், யானுயிர் என்பதறிகை   வேன்மிகு…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  11–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  10  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  11 உணவு, ஆறலைத்தனவும் சூறைகொண்டனவும் என்றும்; மா, வலியழிந்த யானையும் புலியும் செந்நாயும் என்றும்; மரம், வற்றின இருப்பையும் ஞமையும் உழிஞையும் ஞெமையும் என்றும்; புள், கழுகும் பருந்தும் புறாவும் என்றும்; பறை, சூறைகோட்பறையும் நிரைகோட்பறையும் என்றும்; தொழில், ஆறலைத்தலும் சூறைகோடலும் என்றும்; யாழ், பாலை யாழ் என்றும்; ஊர், பறந்தலை என்றும்; பூ, மராவும் குராவும் பாதிரியும் என்றும்; நீர், அறு நீர்க்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  10 –  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  09  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  10  சிறுமியர் தினைப்புனங் காத்தலும் ஆடவர் வேட்டையாடுதலும் உணவைத்தரும் பொழுதுபோக்காக ஆயின. தினைப்புனம் காக்கும் இளமகளிரை வேட்டையாடும் ஆடவர் கண்டு காதலிப்பதும், பின்னர்ப் பல்வகை நிகழ்ச்சிகளால் காதல் கடிமணத்தில் நிறைவேறுவதும் குறிஞ்சி நிலத்திற்குரிய சிறப்பு நிகழ்ச்சிகளாக இலக்கியங்களில்இடம் பெற்றன. மருத நிலத்தில் வாழ்ந்தோர் கடவுளை வேந்தன் என்று கூறி வழிபட்டனர். வேந்தன் என்றால் விருப்பத்திற்குரியவன் என்று பொருள். `வெம்’ என்ற அடியிலிருந்து தோன்றிய சொல்லாகும்….

  இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்) 09 –  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  08  தொடர்ச்சி]   இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்) 09 மக்கள் நாடு மக்களால் உருவாகியது. மக்களே நாட்டின் செல்வம். மக்களின்றேல் நாடு ஏது?  மக்களின் சிறப்பே நாட்டின் சிறப்பு. மக்களிடையே இன்று பல வேற்றுமைகள் உள. இவ் வேற்றுமைகளுள் மக்களை அல்லலுக்கு ஆளாக்குவன சாதியும் மதமும் ஆகும். அன்று தமிழ் மக்களிடையே சாதி வேறுபாடுகள் தோன்றில. `சாதி’ என்னும் சொல்லே தமிழ்ச் சொல் அன்று.  இதனால் `சாதி’ பற்றிய பிரிவு தமிழகத்துக்குப்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  08–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  07  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  08–  சி.இலக்குவனார் நகரங்கள்  நாட்டுக்கு அணிகலன்கள் நகரங்களே.  நகரங்கள் ஒரே நாளில் தோன்றிவிடா.  விளைபொருள் மிகுதியாலும் கைத்தொழிற் சிறப்பாலும் கோயில்கள் அமைவதாலும் கப்பல் போக்குவரத்துக்குரிய வசதியாலும் வாணிபப் பெருக்காலும் தலைநகராகும் பேறு உண்டாவதனாலும் சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்று நகரங்கள் என அழைக்கப்பெறும்.  வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் ‘நகர்’ என்னும் சொல்லும் ‘நகரம்’ என்பதன் அடியாகும். ‘நகரம்’ என்பது எவ்வாறு இருக்கும் என்பதை…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  07–  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  07 மக்களுக்கும் மன்னருக்கும் நாட்டுப்பற்று என்பது கருவிலே வாய்ந்த திருவாக இலங்கியது. மக்கள் அனைவரும் அவரவர் கடமையை நன்கு ஆற்றி நாட்டைப் புரத்தலே அவர் தம் தலையாய பணியெனக் கருதினர்.  குழந்தைகளைப் பெற்று நன்கு வளர்த்தலே தன் கடமையென அன்னை எண்ணினாள். எல்லா நற்குணங்களாலும் நிறைந்த பெரியோராக்குதல் தன் கடன் எனத் தந்தை நினைத்தான்.  படைக்கலன்களைப் படைத்துக் கொடுத்தல் தன் பங்கு எனக் கொல்லன்…

இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06 –  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06   தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.  கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது.  வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு…