சட்டச் சொற்கள் விளக்கம் 231-235 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 231 – 235 231. absolute right முழு உரிமை   முழு உரிமைகளை எக்காரணங் கொண்டும் மட்டுப்படுத்த முடியாது.   எந்தச்சூழலும் முழுமையான உரிமைகளின் தகுதியையோ வரம்பையோநியாயப்படுத்த முடியாது.   அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின்போதும் முழுமையான உரிமைகளை இடைநிறுத்தவோ கட்டுப்டுத்தவோ முடியாது. 232. absolute title   முழுமை உரிமைமூலம் முழுவுரிமை மூலம்‌ முழு உரிமை ஆவணம் முழு உரிமை யாவணம்   முழுமையான நிறைவான உரிமையுடைமை….

சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 226-230 226. absolute privilege   வரையிலாச் சிறப்புரிமை   நிபந்தனையற்ற சிறப்புரிமை அல்லது சலுகை உரிமை. இது நிபந்தனையுள்ள சிறப்புரிமை அல்லது சலுகை உரிமையினின்றும் வேறுபட்டது. 227. absolute property முழுச் சொத்துரிமை   இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்ததற்கு முன்னரோ, பின்னரோ, எய்தியிருந்த உடைமைக்கு வரையறுக்கப்பட்ட உரிமையாளராக இல்லாமல், முழு உரிமையாளராவார். (இந்து மரபுரிமையர் சட்டம், 1956, பிரிவு 14(1) ) 228. absolute responsibility…

சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 221-225 221. absolute owner   முழுச்‌ சொந்தக்காரன் ;   தனி உரிமையாளர்   முழுச்‌சொத்துரிமையர் முழு உரிமையாளர்.   தளவாடங்கள், கட்டடங்கள், நிலம், ஊர்திகள் போன்ற சொத்துகளின் ஒரே உரிமையாளர்.   வில்லங்கத்திற்கோ பிணைப்பொறுப்பிற்கோ உட்பட்டிருந்த போதிலும் சொத்தின் முழு உரிமையையும் மாற்றி வழங்கும் தகுதியுடையவர். 222. Absolute owners of all property . அனைத்துச் சொத்து முழு உரிமையாளர்கள்   ஒன்றின்மீதான அனைத்து…

சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 211-215 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 216-220 216. absolute monarch முழு முடியாட்சியர்   முழுமை முடியாட்சி என்பது மன்னர் அல்லது ஆட்சித் தலைவர் தம் சொந்த உரிமை அல்லது அதிகாரத்தில் ஆட்சி செய்யும் அமைப்பாகும். 217. absolute monopoly முழு முற்றுரிமை   தனி வல்லாண்மை முழு வணிக உரிமை முழு நிறைவுத் தனியுரிமை முழுத் தனி வல்லாண்மை   தொழிலில் அல்லது வணிகத்தில் அல்லது துறையில் விற்பனையாளர் அல்லது உற்பத்தியாளர் முழு உரிமையுடன்…

சட்டச் சொற்கள் விளக்கம் 196 – 200 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 191-195: இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம்  196 – 200 196. Absention from intoxicants (குடி) விட்டொழிப்பவர்     குடிப்பழக்கத்தைக் கைவிடுதல் என்பது மதுபானங்களையும் போதைப்பொருள்களையும் முற்றிலும் தவிர்ப்பதற்கான நடைமுறையாகும்.   மது பானங்களைக் கைவிடும் பொழுது போதையில்லா நல்ல குடிவகைகளை அருந்தலாம்.   மதி மயக்கம் தருகின்ற, வெறிஊட்டுகின்ற போதைப் பொருள்களை விலக்குதல் என்பது சமயம், நல் வாழ்வு, உடல் நலம், மெய்யியல்,குமுகம் போன்ற எதன் கரணமாகவேனும் இருக்கலாம்.   காண்க: Abstaine  …

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 171-175

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 171-175 171. Abscondence தலைமறைவு அஞ்சியொளிதல்    ஒருவர் தமது உறைவிடத்திலோ வெளியிடத்திலோ பதுங்கியிருத்தல் அல்லது சட்டத்திற்கஞ்சி ஓடி ஒளிந்திருத்தல் 175. Absconder தலைமறைவானவர் பதுங்கியவர் அஞ்சியொளியுநர்   நீதிமன்றப் பிடியாணையின் செயல்பாட்டைத் தவிர்க்கும் பொருட்டு மறைந்து வாழ்பவர்.   (அஞ்சியொளியுநர் பற்றிய வெளிப்படை அறிவிப்பு குறித்து, கு.ந.ச.தொகுப்பு, பி. 82 கூறுகிறது.) 173. Absconding தலைமறைவாகுதல் அஞ்சியொளிதல்    அல்லது அழைப்பாணை பெறுவதில் இருந்து தப்பித்தல்…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 166-170

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165- தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 166-170 166. Abrogate (வினைச்சொல்)   வழக்கொழியச் செய்  வழக்கறு;  அழி ; நீக்கு ; திரும்பப்பெறு முடிவு கட்டு   நடைமுறையிலுள்ள விதியையோ சட்டத்தையோ பயன்முறையையோ செயல்பாட்டிலுள்ள எதையோ வழக்கொழியச் செய் அல்லது அதற்கு முடிவு கட்டு           167. Abrogation (பெயர்ச்சொல்) தவிர்த்தல் வழக்கொழித்தல்சட்ட நீக்கம் சட்டத்திருத்தம்   அதிகார பூர்வமாக இரத்து செய்(தல்) என்பர். இரத்து தமிழ்ச்சொல்லல்ல. இரத்து செய் என்னும் இரு கலப்புச் சொற்களுக்கு…

சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 161-165

(சட்டச் சொற்கள் விளக்கம் : இலக்குவனார் திருவள்ளுவன்: 156-160 – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 161-165 161. Abridged edition சுருக்கப் பதிப்பு   புத்தகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பாகும். இது முழுமையான நூலல்ல. எனினும் படிக்க நேரமில்லாவிட்டாலும் புத்தகத்தைப் படிக்க ஆர்வம் உள்ளவர்களுக்குச் சுருக்கப்பட்ட பதிப்பு உதவியாக இருக்கும். கதையோ புதினமோ கட்டுரையோ நாடகமோ நூலின் சுருக்கமாக இருப்பினும் நூலின் அடிப்படைக் கருத்துகள் வெட்டப்படாமலும் நூலோட்டம் சிதையாமலும் இருக்கும். ( அல்லது இருக்க வேண்டும்.) 162. Abridged form சுருங்கிய வடிவம்  …

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 91. Abetment of suicide of child குழந்தைத் தற்கொலைக்கு உடந்தை   குழந்தை அல்லது இளவர் தற்கொலை புரிந்துகொண்டால் அதற்கு உதவிய அல்லது உடந்தையாக இருந்து அல்லது தூண்டுதலாக இருந்தவர் தண்டிக்கப்படுவார்.   18 அகவைக்குட்பட்ட / மனநலங் குன்றிய/பிற ழ் மனம் உடைய/மடமை மிகுந்த/போதையில் உள்ள/ எவரேனும் தற்கொலை புரிந்து கொண்டால், இதற்கு உடந்தையாக இருப்பவர் மரணத் தண்டனை அல்லது வாணாள் தண்டனை…