சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 116-120 116. Able வல்லமையுள்ள   ஒரு செயலைச் செய்வதற்குரிய அல்லது சிக்கலைத் தீர்ப்பதற்குரிய ஆற்றல் அல்லது திறன் அல்லது போதுமான வளங்களைக் கொண்டிருத்தல்.   ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதற்குரிய போதுமான வளங்களையும் அதிகாரங்களையும் கொண்டிருத்தல். 117. Able bodied வல்லமையர்   உடல் திறனாளர் என நேர் பொருளாக இருந்தாலும் உடலாலும் உள்ளத்தாலும் வலிமையானவரையே குறிக்கும்.   உடல், உள்ள வலிமை என்பது, ஒரு வேலையைச் செய்து அல்லது…

சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 111-115 111. Abjection இழிநிலை   இழிதகவு   இழிதகையான நிலைமையக் குறிப்பது   இலக்கியத் திறனாய்வுக் கோட்பாட்டில் புறக்கணிப்பு என்னும் கருத்தாக்கத்தையும் இது குறிக்கும். 112. Abjure   கைவிடு   விட்டொழி   முற்றோக ஒழித்தல் ஆணையிட்டொழி; (சத்தியஞ்செய்து விட்டொழி) ஏற்கெனவே மேற்கொண்ட சூளுரை அல்லது உறுதிமொழியைக் கைவிடுதல். கொள்கைக் கடப்பாட்டினைக் கைவிடுவதையும் குறிக்கும்.   ஆணையிட்டொழி (சத்தியத்தை விட்டொழி) என்னும் பொருளடைய abiūrō என்னும் இலத்தீன்…

சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 106-110 : இலக்குவனார் திருவள்ளுவன் 106. Abiding கீழ்ப்படிகின்ற கடைப்பிடிக்கின்ற   நெறிமுறைக்கு அல்லது விதிமுறைக்குக் கீழ்ப்படிகின்ற அல்லது அதனைக் கடைப்பிடிக்கின்ற செயல். 107. Abiding interest நிலை நலன்   நிலையான அக்கறை அல்லது நிலையான ஆர்வம் கொண்டிருத்தலைக் குறிக்கிறது.   ஒரிசா குத்தகைச் சட்டம், சொத்தில் நிலையான ஆர்வம் கொண்டவர், உறுதியாக .. . . .  எப்போதும் நிலத்தில் நிலையான ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும்…

சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 96-100 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 101-105 101. abide by arbitration பொதுவர்  தீர்ப்புக்கு இணங்கு   Abide – அமைந்தொழுகு, மதித்து நடத்தல்; எனினும் இணங்கு என்னும் சுருக்கச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.   arbitration என்றால் நடுத்தீர்ப்பு என்கின்றனர். தீர்ப்பு என்றாலே நடுநிலையில்தான் இருக்க வேண்டும். நடுவர் தீர்ப்பு என்றும் சொல்கின்றனர். magistrate என்பவரை நடுவர் என்பதால் வேறுபாடு காட்ட வேண்டி உள்ளது. இரு தரப்பிற்கும் ஒத்திசைவு காண்பதற்குரிய பொதுவானவர் என்ற பெயரில் பொதுவர் எனலாம்….

சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 91 – 95 91. Abetment of suicide of child குழந்தைத் தற்கொலைக்கு உடந்தை   குழந்தை அல்லது இளவர் தற்கொலை புரிந்துகொண்டால் அதற்கு உதவிய அல்லது உடந்தையாக இருந்து அல்லது தூண்டுதலாக இருந்தவர் தண்டிக்கப்படுவார்.   18 அகவைக்குட்பட்ட / மனநலங் குன்றிய/பிற ழ் மனம் உடைய/மடமை மிகுந்த/போதையில் உள்ள/ எவரேனும் தற்கொலை புரிந்து கொண்டால், இதற்கு உடந்தையாக இருப்பவர் மரணத் தண்டனை அல்லது வாணாள் தண்டனை…

சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 86-90 86. Abetment of assault தாக்குதலுக்கான / தாக்க முனைதலுக்கான உடந்தை   திடீரென, கடுமையான ஆத்திர மூட்டலினாலின்றித்,   தாக்குதல் நடத்துதல் அல்லது குற்ற வன்முறையைப் பயன்படுத்தல் இ.த.ச.பிரிவு 134 இன் கீழ்க் குற்றமாகும்.   தரைப்படையில் அல்லது கப்பற்படையில் அல்லது வான்படையில் உள்ள அதிகாரியோ வீரரோ மீகாமரோ(கப்பலோட்டி வீரர்) வான்படைஞரோ அலுவற்பொறுப்பை நிறைவேற்றும் எந்த ஓர் உயர் அதிகாரியைத் தாக்கினாலும் அஃது ஏழாண்டு வரையிலான சிறைத்தண்டனைக்கும் தண்டத்தொகை விதிப்பிற்கும் உரியது.   தாவு/தாக்கு …

சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொகுப்பு) சட்டச்சொற்கள் விளக்கம் 81-85 81. Abetment by aid தூண்டல் உதவி   குற்ற உடந்தை உதவி – குற்றவாளி, குற்றம் புரிவதற்கு வேண்டுமென்றே உதவி, தூண்டுதலாக இருப்பது.   குற்றம் புரிய அல்லது குற்றச் செய்கையை எளிமையாக்கத் தூண்டுநர் உதவுகையை இது குறிக்கிறது. குற்றவாளிக்கு உதவும் எண்ணம் இருப்பதே முதன்மையானது.   தூண்டுதல் என்பது, குற்றவாளி குற்றத்தைச் செய்யும்போது, குற்றம் புரிய ஏவுதல் அல்லது சொல்லிக் கொடுத்தல் அல்லது ஊக்குவித்தல் அல்லது…

சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 71-80 71. Abbreviate சுருக்கு   நூல் முதலிய எதையும் சுருக்குதல், எனினும் குறிப்பாக ஒரு தொடரைச் சுருக்கித் தலைப்பெழுத்துச் சொற்களால் குறிப்பிடல்.திருவள்ளுவர் ஆண்டு என்பதைத் தி.ஆ. எனக் குறிப்பிடல்போல்.   காண்க: Abbreviation 72. Abbreviation           குறுக்கம்   குறியீடு சுருக்கக் குறியீடு குறுங்குறி குறிப்பெழுத்து சொல்குறுக்கம் சுருக்கீடு   ஒரு சொல் அல்லது தொடரின் சுருக்கம். திருவள்ளுவருக்குப் பின் என்பதைத்…

சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 51-60 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 61-70 61. abate in equal proportion சம விகிதத்தில் குறைப்பு   பங்குகளை முழுமையாகச் செலுத்த இறந்தவர் சொத்துகள் போதுமானவையாக இல்லாவிட்டால் அச்சொத்தின் பயனாளர்களிடம் சரிவிகிதமாகப் பகிர்ந்து குறைத்தல் என்பது போன்று இழப்புகளைச் சரி விகிதத்தில் குறைத்தல்   மாகாண மாநகர நொடிப்புச் சட்டம் பிரிவு 49.2. 62. Abatement       தணிவு   அறவு   தள்ளுபடி, விலக்கிவை   நூப்பு, அற்றுப்போதல், குறைப்பு…

சட்டச்சொற்கள் விளக்கம் 51 – 60 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 41-50 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 51 – 60 51. Abandonment of a child குழந்தையைக் கைவிட்டுவிடுகை   பன்னிரண்டு அகவைக்குக் கீழுள்ள குழந்தையை அதன் பெற்றோர் அல்லது காப்பாளர் அந்தக் குழந்தையை விட்டு முற்றிலுமாக விலகிச்செல்லவேண்டும் என்னும் கருத்துடன் ஓரிடத்தில் விட்டுச்செல்லுகை அல்லது பாதுகாப்பின்றி விடுதல். குழந்தையைக் கைவிட்டுவிடுகை (பி.317, இ.த.தொ.ச.) 52. abandonment of copyright பதிப்புரிமையைக் கைவிடல்     Copyright என்பது பதிப்புரிமை, தனிப்பயனீட்டுரிமை.   புத்தகத்தைப் பதிப்பித்து…

சட்டச்சொற்கள் விளக்கம் 41-50 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 31 –40 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) 41. Abandoned கைவிடப்பட்ட   கைவிடப்பட்ட குடும்ப உறுப்பினர், கைவிடப்பட்ட சொத்து, கைவிடப்பட்ட ஏரி, கைவிடப்பட்ட சுரங்கம், கைவிடப்பட்ட பணிகள் என்பன போன்று பாெறுப்பைத் துறக்கும் நிலை. 42. Abandoned child கைவிடப்பட்ட குழந்தை   பெற்றோர்/உறவினர்/பாதுகாவலர்/பேணுநர் இன்றி விடப்படும் குழந்தை.   அனாதை/உறவிலி/ஏதிலி எனக் குழந்தை மீது அவமுத்திரை குத்தக்கூடாது. எனவே, கைவிடப்பட்ட குழந்தையைக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை அல்லது கேட்பாரற்ற குழந்தை எனக் குறிப்பிடுகின்றனர்.   இந்தியத் தண்டிப்புச்சட்டம், இந்து…

சட்டச்சொற்கள் விளக்கம் 31-40 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச்சொற்கள் விளக்கம் 26 -30 : இலக்குவனார் திருவள்ளுவன் -தொடர்ச்சி) சட்டச்சொற்கள் விளக்கம் 31-40 31. A while சிறிது நேரம்   while-குறிப்பிட்ட ஒரு செயல் நிகழ்வின்போது; அச்சமயத்தில்; அப்பொழுது; உடன் நிகழ்வாக; அதே வேளையிலேயே. காலம்; நேரம்; எனப் பொருள்கள். ஆனால், A while என்னும் பொழுது சிறிது நேரம் அல்லது கொஞ்ச நேரம் என்றே குறிக்கிறது. 32. A, An ஒரு, ஓர்   ஒற்றை எண்ணிக்கையைக் குறிக்கும் ஒரு என்னும் சொல் உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னர் ஓர்…