தோழர் தியாகு எழுதுகிறார் 246 : கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி

(தோழர் தியாகு எழுதுகிறார் 245 : பெரியகுளம் மாரிமுத்து-மகாலட்சுமி சாதி ஆணவக் கொலையா? – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கல்வியுரிமைக் கவன ஈர்ப்பு நோக்கி >>> சென்ற சூலை 26ஆம் நாள் இளைஞர் அரண் சார்பில் குடந்தையில் நடைபெற்ற கல்வியுரிமைப் பேரணி கல்வியுரிமை மாநாட்டில் நாம் எழுப்பிய முழக்கங்களையும் இயற்றிய தீர்மானங்களையும் நினைவிற்கொள்ளுங்கள். நம் கோரிக்கைகள் தெளிவானவை:1) 2004 சூலை 16ஆம் நாள் குடந்தை நகரில் கிருட்டிணா பள்ளியில் பற்றிய கொடுந்தீயில் 94 குழந்தைகள் உயிரோடும் கல்விக் கனவுகளோடும் மாண்டு போன கொடுமைக்கு முழுமையாக…

தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 220 : அவலமான கல்விச் சூழல் 1/2 – தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார் அவலமான கல்விச் சூழல் 2/2 வருங்காலங்களில் அரசுக் கல்லூரிகள் புதிய பாடத்திட்டங்களுடன் தமிழ்நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட வேண்டும். தனியார் தன்நிதிக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி நிறுத்தப்பட வேண்டும். பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்களில் போதிய உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தவும், தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கவும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். கூடவே உயர் கல்வித்துறையில் நடக்கும் இலஞ்ச–ஊழல் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதோடு, அவற்றைத்…

தோழர் தியாகு எழுதுகிறார் 220 : அவலமான கல்விச் சூழல் 1/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 219 : உரிமைத் தொகை உண்டு! உரிமைக் கல்வி கிடையாதா? – தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்அவலமான கல்விச் சூழல் 1/2 இனிய அன்பர்களே! தமிழ்நாட்டின் கல்விநிலை குறித்துக் கவலைப்படுவதில் இளைஞர் அரண் தனித்து விடப்படவில்லை. சவகர் நேசன் போன்ற கல்விச் சிந்தனையாளர்கள் இந்நிலை குறித்து மிக ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் கண்டு வருகின்றோம். மாநிலக் கல்விக் கொள்கையில் என்ன எதிர்பார்க்கிறோம் எனபது குறித்து சூன் 10ஆம் நாள் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வியாளர்களும் பேராசிரியர்களும் புதிய…