(ஊரும் பேரும் 56 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – இதிகாசமும் ஊர்ப் பெயரும் – தொடர்ச்சி) சிரீ (ஸ்ரீ) சத்திமுற்றம் திருவெண்டுறை மகாபலிபுரம் தென்காசி உத்தரகாஞ்சி மானாமதுரை; வடமதுரைபாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையும் ஆன்ற பெருமை வாய்ந்ததாகும். தமிழும் சைவமும் தழைத் தோங்கக் கண்ட அந்நகரின் பெயரை ஏற்றுத் திகழ்வது மானா மதுரை. மான வீரன் மதுரை என்பது மானா மதுரை யாயிற்று என்பர். சோழ நாட்டில் ஓர் ஊர் வடமதுரை என்று பெயர் பெற்றுள்ளது. திருஆலவாய் நல்லூர் மதுரையில் அமைந்துள்ள சிவாலயம் திரு ஆலவாய்…