தோழர் தியாகு எழுதுகிறார் 244 : பொல்லாத பதின்மூன்று

(தோழர் தியாகு எழுதுகிறார் 243 : தமிழீழம்: புதிய தலையாட்டிகள் 2/2 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! போகாத ஊருக்கு வழிகாட்டும் பொல்லாத பதின்மூன்று 13ஆம் திருத்தச் சட்டம் ஈழத் தமிழர்களின் தேசியச் சிக்கலுக்கு அரசியல் தீர்வாக முடியுமா? இலங்கை அரசவையில் 13ஆம் திருத்தச் சட்டம் இயற்றப்பட்டு36ஆண்டுக் காலமாயிற்று. இந்த 36 ஆண்டுகளில் அதனால் விளைந்த பயன் என்ன? அது தீர்வாகவில்லை என்பது மட்டுமன்று, தீர்வை நோக்கிய பயணத்தில் ஓரங்குலம் கூட முன்னேறவில்லை என்னும் போது 13ஆம் திருத்தச் சட்டம் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய்…

சிறிலங்கா நம்பகத்தன்மையை மீண்டும் இழக்கத் தொடங்கி விட்டது – பல நாடுகள் மனக்குறை!

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] சிறிலங்கா நம்பகத்தன்மையை மீண்டும் இழக்கத் தொடங்கி விட்டது – பல நாடுகள்   மனக்குறை!      செனீவா ஐ.நா மனித உரிமைக் கழக 35ஆவது அமர்வு (ஆனி 09, 2048/ சூன் 23, 2017 அன்று) நிறைவடைந்துள்ளது. தமிழ் மக்கள் தமது நேரடி வாழ்வியல்  பட்டறிவுகளினூடாக சிறிலங்கா எவ்வாறு நடந்து கொள்ளும் என்று திரும்பத் திரும்ப உலக நாடுகளிற்கு வலியுறுத்தி வந்ததனை பல நாடுகள் ஏற்றுக் கொள்ளும் நிலைமை இன்று உருவாகி வருகின்றது.    2015  அத்தோபரில் நிறைவேற்றப்பட்ட…

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நடைபெறும் தொடர்போராட்டங்களில் அணிதிரள்க!

நிலமீட்டெடுப்பு – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகத் திங்களன்று நடைபெறும் தொடர்போராட்டங்களில் உணர்வுடன் பெருந்தொகையில் அணிதிரள்க!     தமிழீழத் தாயகத்தில் சிறிலங்காப் படையினரால் பறிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை மீட்டெடுப்பதற்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாக உண்மைநிலையினை அறிந்து கொள்வதற்காகவும் எமது மக்கள் நடாத்தி வரும் தொடர் போராட்டங்களுக்குத் தோழமை தெரிவித்து புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு கவனயீர்ப்பு போராட்டங்களில் மக்களை அணிதிரள தலைமையர் வி. உருத்ரகுமாரன்  அழைப்பு விடுத்துள்ளார்.   எதிர்வரும் திங்கட்கிழமை வைகாசி 29, 2048…

பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !

தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு விடை என்ன ? பிரித்தானியத்தலைமையர்(பிரதமர்) வாயிலில் அணிதிரண்ட தமிழர்கள் !   நல்லாட்சி என்ற பெயரில் சிறிலங்கா அரசினால் மூடி மறைக்கப்படும், நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது.   கடந்த ஞாயிறன்று (வைகாசி 09 / 22-05-2016) பிரித்தானியத்தலைமையர்(பிரதமரது) வாயில் தளத்துக்கு முன்னால் இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்புப் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கு செய்திருந்தது.  வெள்ளையூர்தி கடத்தல்கள், கைதுகள் எனச் சிறிலங்காவில் நீடிக்கும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி இடம்பெற்றிருந்த…