தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.      இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.      பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார். நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார். இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை…