எழிலரசி அல்லது காதலின் வெற்றி 6 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 103  ஐப்பசி 15, 2046 / நவ. 01.2015 தொடர்ச்சி) 6   அழகிய தையலை யன்புடன் மணக்க செம்ம லெவனுமி ச்சிறந்த நகரில் மனப்பெரு மையுடன் மகிழ்ந்து வருவன் மணத்தால் நமது பணத்தைப் பகுக்க எண்ணினோ மல்ல; எண்ணி னவளும் வேளி ரொருவனை விரும்பி மணப்பின் பெருமை யுமுண்டு பெரும்பய னுறுவோம். அவ்வித மின்றி யனைவரும் வெறுக்க அழகிய தங்கை யற்பக் கூலியை சிறுத்துப் பெருத்துஞ் செல்வ மிலானை மணந்தால் வருவது மானக் கேடென எழிலர சிக்குறு மின்ப வாழ்விற் சிறுதி…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 5 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 102 ஐப்பசி 08, 2046 / அக். 25.10.2015 தொடர்ச்சி) எண்ணினர் தனியே யிருப்பதா யோர்நாள் காதலின் கையிற் கருவிய ராகி இன்ப வாடல்க ளன்பாய்த் தொடங்கினர். தென்றல் தவழ்ந்து தேனுறு மலரினும் முத்த மளித்து முகமலர் கொண்டே இன்ப மெய்து மெழினெறி கண்டே எழிலர சிக்கோ ரின்ப முத்தம் ஆடலன் விரும்பி அன்பி னளித்தான். காதல் கைமிகக் கருத்தழிந் தவளும் நிரைவளை முன்கை விரைவி னீட்டி இளமுலை ஞெமுங்க வளைந்து புறஞ்சுற்றி “ நின்மார் படைதலின்இன்பமு மின்று ” நன்றே வாழ்க…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 4 – பேரா.சி.இலக்குவனார்

(அகரமுதல 101 ஐப்பசி 01, 2046 / அக். 18.10.2015 தொடர்ச்சி) கரையிடை யிட்ட காட்டா றிரண்டு கலந்தொன் றாகிக் கரைகடந் தோட எதிர்ப்படு பொருளெலாம் சிதைப்படு தன்மையின் குலமுங் குடியும் கொடிய சாதியும் உயர்வும் தாழ்வும் உறுமணச் சடங்கும் எல்லாக் குப்பையு மிரிந் தோடினவே இருவருங் கரந்தனர் எய்தின ரின்பம் இரண்டுட லென்பதை யிருவரு மறந்தனர் “மணந்த நிகழ்ச்சி வணிகர் அறிந்திடில் உலற லெய்துவர் ஒருங்கே யழிப்பர்” என்றறிந் திருவரும் எவருங்காணா இயல்பினி லொழுகி இன்பந் துய்த்தனர் இவர்கள் செயலில் எட்டுணை ஐயமும்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 தொடர்ச்சி) எழிலரசி அல்லது காதலின் வெற்றி 3   வானில் விளங்கா மதியென முகமும் சேலினைப் பழிக்கும் சீர்கரு விழியும் புன்னகை தவழும் மென்செவ் விதழும் முத்தென முறுவலும் மின்னென உருவும் வேய்த்தோள் மீது மிடைந்து சுருண்ட கருங்குழல் தவழும் காட்சியும் மன்றிச் சாதுவை வென்ற சாந்த குணமும் அன்பும் அடக்கமும் அருளும் அறமும் ஒருங்கே கொண்டு ஓரு வாகி யாழினு மினிய இசையுங் கொண்ட முற்றத் துறந்த முனிவரு மிவளை ஒருகால் நோக்கில் உணர்விழந் திடுவரால்,…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2 – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 2   தோள்களும் கொங்கையும் நாள்தொறும் வளர்ந்தன வளர்மதி யன்ன வாண்முகம் பொலிந்தன கொடியிடை துவள அடிபெயர்த் திட்டாள் மணத்தின் சுவையை மனத்துட் கொண்டாள். வெள்ளப் பெருக்கை மெல்லிய நாணற்   புதர்கள் தடுக்கப் பொருந்திய வாறு காதல் மடைக்கிடு கற்களாய் நின்றனர் மெல்லக் கசிந்து மேவிய கற்களைத் தள்ளிடும் நீரின் தன்மை போன்ற காதலின் தன்மை கண்டவ ரல்லரே;   “உருவுங் குணனும் ஒத்த பான்மையிற் காத லிருவர் கருத்தொரு மித்தபின் குலனு மோரார் குடியு மோரார்…

எழிலரசி அல்லது காதலின் வெற்றி – பேரா.சி.இலக்குவனார்

எழிலரசி அல்லது காதலின் வெற்றி   உலகினிற் சிறந்த வுயர்கலா புரியில்                 வணிக னொருவன் வான் பெருஞ் செல்வனாய்ச் சீருடன் வாழ்ந்து செல்லுங் காலை புதல்வர் மூவரும் புதல்வி யொருத்தியும் 5.     எச்சமாய் நிற்க இச்சையி னீட்டிய                 அருநிதி துறந்து ஆவி நீத்தனன் பெற்றோ ரீட்டிப் பேணிய பொருளை மைந்தரைப் போலவே மகளிர் தமக்கும் உரிமை யாக்கும் ஒருவிதி நினைந்து       தந்தை மாய்ந்தபின்தனயர் மூவரும் பொருள்மீ துற்ற பெருவேட் கையினால் தம்முடன் பிறந்த தங்கை நன்மணம் பெறுவா ளென்னிற் பெரும்பொருள்…