தமிழ் வளம் காத்த இளங்குமரனார் – நினைவுப் புகழஞ்சலி, 12.09.21

தமிழ் வளம் காத்த இளங்குமரனார் – நினைவுப் புகழஞ்சலி புலவர் இரா. இளங்குமரனார் (சனவரி 30, 1927 – சூலை 25, 2021) ஒரு தலை சிறந்த தமிழ் அறிஞர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய இவர், பின்னர் நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், உரையாளர் எனப் பல பணிகளையும் செய்துள்ளார். தமிழ் வழிக் கல்வி, தமிழ் வழித் திருமணம், குறளியக் கருத்துக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அவரது நினைவஞ்சலி நிகழ்வு, பேரவையின் சார்பில் ஆவணி 27, 2052 ,  செட்டம்பர்…

பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்!

பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்! அடுத்தடுத்து இப்படியா ? ‘சிந்தனையாளன்‘ இதழைப் பார்த்தவுடன்அதன் இறுதிப்பக்கத்தை ஆவலுடன்தேடுவோர் மிகுதி. இதழ்தோறும் இறுதிப்பக்கத்தில் இடம்பெற்றிருப்பதுபாவலர் தமிழேந்தியின் பாடல். ” நடப்பு அரசியலை வெளிப்படையாகப்பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்கியச் சூழலில் தமிழேந்தி மட்டுமேஅந்தத் தனித்தன்மையைக் காப்பாற்றிவருகிறார் ”  என்று பாவலர் அறிவுமதி வியந்து பேசுவது வழக்கம். ‘சிந்தனையாளன்’ இறுதிப் பக்கக் கவிதையாக இனித் தமிழேந்தி வரமாட்டார்.அரசியல் கவிதை அற்றுப்போகாமல்காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின்பயணம் நின்றுவிட்டது. தமிழின விடியலுக்கான எல்லாப் போராட்டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சிமுழக்கமிடும் போராளித் தமிழேந்திகுரலை இனிக் கேட்க வாய்ப்பில்லை!…

சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? – செந்தலை கவுதமன்

ஓடிவந்த கொலைமழையில் ஓடியதோ சாதிமதம் தேடிவந்த உதவிகளில் தெரிந்ததெலாம் மனிதமனம் திறந்துவைத்த கோவில்களில் தெய்வமெலாம் மனிதர்களே மறந்துவிட்ட சாதிகளும் மதவெறியும் நமக்கெதற்கு? செந்தலை கவுதமன்

அடடா போர்ப்பண் கேட்கிறதே! – செந்தலை கவுதமன்

வழியைக் காட்டும் விழியானாய் வலியைப் போக்கும் மொழியானாய் இழிவைத் துடைத்த ” பெரியாரும் இனத்தைக் காத்த” நீயும்தான் விழியாய் ஒளிரும் இருசுடர்கள் விளைச்சல் காக்கும் பெருமுகில்கள் அழிக்க நினைப்போர் அழிவார்கள் அடடா போர்ப்பண் கேட்கிறதே! செந்தலை கவுதமன்