செம்மொழிப் போர்மறவர் சி.இலக்குவனார் தமிழ்வாழ்த்து (கலித்துறை) அகர முதலா னவளே அமிழ்தே அருள்வாய் இகர உகர உடல்நீ உயிர்நீ உணர்வாய் பகர்கிறே னிப்பா வரங்கில் பரவசம் கொள்வாய் பகர்வாய்  பகர்வதி ளங்குமர னல்லதமிழ் தானென்றே! (நேரிசை வெண்பா) தந்தைக்கு வாய்த்த தவப்புதல்வன் செந்தமிழ்ச்சீர் சிந்தை நிறைதிரு வள்ளுவன் – தந்தைதந்த செந்தமிழ்க் காப்புக் கழகமதை செவ்வனே முந்தியே காப்பார் முனைந்து (நேரிசை வெண்பா) தனித்தமிழை மீட்டெடுத்த தன்மான வீரன் கனித்தமிழ்ச் சொல்லன் கணியன் – இனித்ததமிழ் கல்விமொழி யாவதற்குக் கண்ணுறக்கம் விட்டொழித்த வல்லார் இலக்குவனார்…