தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழர் நலனுக்காகப் பிறர் குரல் கொடுக்கக்கூடாதா?      ஒருவர் நலனுக்காக மற்றவர் குரல்கொடுக்கக்கூடாது என்பதும் ஓர் இனத்தவரின் நலனுக்காகப் பிற இனத்தவர் குரல் கொடுக்கக்கூடாது என்பதும் அறியாமையல்லவா? இனப்பற்றை ஆரவாரச் செயலாகக் கருதுபவர்கள் அப்படித்தான்  அறியாமை மிகுந்தவர்களாக இருக்கின்றனர். சான்றுக்கு ஒன்று பார்ப்போம்!   அண்மையில் எழுவர் பேரணிக்காக, வேலூரில் இருந்து சென்னை வரை ஊர்திப்பேரணி நடப்பதாக இருந்ததை அனைவரும் அறிவர்! அந்தப் பேரணிக்குப் பலதரப்பட்டாரும் ஆதரவு தெரிவித்தனர். அதுபோல் நடிகர்  விசய்சேதுபதியும் 25 ஆண்டுகளாக அறமுறையின்றி அடைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கொடுமையாகக் கூறித் தானும்…

பகற்கொள்ளையடிக்கும் பொறியியல் கல்லூரிகளைத் தடுத்து நிறுத்துக!

  பெரும்பாலான பொறியியற் கல்லூரிகள், பெற்றோர்களிடம் கொள்ளையடித்துத் தங்கள் வருவாயை உருவாக்கிச் செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதாகவே உள்ளன. பொறியியற் கல்லூரிகள் என்பன அதை நடத்துவோர் வசதிகளுக்காகவே யன்றி, மாணாக்கர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உதவவோ கல்வி நலனுக்காகவோ அல்ல.   பொதுவாக எந்த நிறுவனமும் சொந்த நிதிநிலையில் கல்லூரியை நடத்துவதில்லை. பெற்றோரிடம் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பணத்தில்தான் அனைத்து நிறுவனமும் கல்லூரிகளை நடத்துகின்றன. ஆனால், மாணவர்களுக்குரியவசதிகளைச் செய்து தருவதில்லை.  ஆசிரியர்களுக்கும் விதிமுறைப்படியான முழு ஊதியத்தையும் தருவதில்லை. முறைப்படியான கல்வி வசதிகளை மாணவர்களுக்கு அளிக்க இயலாமலும் ஆசிரியர்களுக்கும்…

இலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்!

மக்கள் உள்ளங்களில் வாழும் தலைவர் இலீ புகழ் ஓங்கட்டும்!   நம் நாட்டு அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கும் பொழுது அத் தொகுதியைச் சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகின்றேன் என்பார்கள். இவ்வாறு எடுத்துக்காட்டாகக் கூறும் அளவிற்குச் சிங்கப்பூரைச் செதுக்கியவர்தான் மக்கள் தலைவர் இலீ குவான் இயூ(lee-kuan-yew: 1923-2015). தமிழ், தமிழர், தமிழ் ஈழம் மீது பரிவு கொண்டு செயல்பட்ட மாபெரும் தலைவர் இலீ மறைந்தது உலகெங்கும் உள்ள தமிழர்க்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவே உள்ளது. தமிழீழ விடுதலை நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடி மகிழும்வரை காலன் விட்டு வைத்திருக்கலாம்….

வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன் – இலக்குவனார் திருவள்ளுவன்

  வாசனை இழந்தது காங்.; ‘வாசனை’ இல்லா வாசன்     ஊடகங்களில் உலா வந்த செய்தி உண்மையாயிற்று. ஆம்! வாசன் பேராயக்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். புதிய கட்சி தொடங்குகிறார். என்றாலும் புதிய ஊர்தியில் பழைய பாதையில் செல்ல உள்ளாரே தவிர, புதிய பாதையில் நடைபோடப்போவதில்லை என்பதை அவரே உறுதிப்படுத்தி விட்டார்.   தனக்குப் பல பொறுப்புகளையும் பதவிகளையும் தந்த சோனியாவையும் கட்சியையும் தாக்க வேண்டா என எண்ணுவது நல்லது. அவ்வாறில்லாவிட்டாலும் தனிமனிதத் தாக்குதலற்ற அரசியலே நன்று. என்றாலும் கொள்கையில் மாற்றம் இல்லை என்ற பொழுது…