தமிழ்மொழி விழா 2019 – தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா

 தமிழ்மொழி விழா 2019 – தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவில் தமிழ்ச்சான்றோர் புகழ் போற்றும் தமிழவேள் முப்பெரு விழா பங்குனி 17, 2050 ஞாயிறு 31.3.2019  காலை 10.00 முதல்  11.30 மணி வரை இந்திய மரபுடைமை நிலையம் (சிற்றிந்தியா) சிங்கப்பூர் தலைமை: பேராசிரியர் சுப.திண்ணப்பன் முன்னிலை: இராசுகுமார் சந்திரா (தலைவர் – சிற்றிந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கம்) சிறப்பு விருந்தினர்: இரா.தினகரன் (நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்) நினைவுரை: சிங்கப்பூரின் முதல் தமிழர் முன்னோடி  நாராயண(ப் பிள்ளை): அருண் வாசுதேவு…

‘தமிழவேள்’ உமா மகேசுவரனார் நினைவு நாள் 9.5.1941

ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அமைத்த நின்புகழ் ஓங்குக! முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த தமிழ்மொழி பண்டைய காலம் போல் மீண்டும் ஏற்றம் பெற வேண்டுமென்று இரண்டு பேர் விரும்பினார்கள். ஒருவர் பாண்டித்துரை(த்தேவர்), மற்றொருவர் உமா மகேசுவரனார். பாண்டித்துரை(த்தேவர்) 1901ஆம் ஆண்டு மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அவர் தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் பிறகு உமா மகேசுவரனார் 14.5.1911 அன்று தஞ்சையில் கரந்தை தமிழ்ச்சங்கத்தை தொடங்கினார். அது முதல், தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் விளங்கினார். அவர்…