பிறமொழி எழுத்தொலிகள் தமிழில் இன்மை அதன் சிறப்பே! –

பிறமொழி எழுத்தொலிகள் தமிழில் இன்மை அதன் சிறப்பே!   முதலில் பிறந்த மொழி தமிழ்.  அதனால் தமிழ் அழிந்து  போகாமல் இருக்கிறது. தமிழ் மரபியல் கண்ட மொழி. தமிழ் வழிவழியாக  இளமையோடு வழங்கிவருகிறது. மலையாளம் 700 ஆண்டுகளுககு முன்னர்த் தமிழாக இருந்தது. கன்னடமும் துளுவும் கூட தமிழாகத்தான் இருந்தன. 1000 ஆண்டுகளுக்கு முன் கன்னடம் தமிழாக இருந்தது. மக்கள் பழகிப் பழகி வேறு மொழியாகிவிட்டது. ஆனால் தமிழ் மட்டும் இன்றும் தனித்து இயங்குகிறது. தமிழ் எந்தக் காலத்துக்கும் அழியாது. தமிழை அழிப்பதற்குக் கங்கணம் கட்டுவர்கள்…

தமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விசய்க்குப் பாராட்டுகள்!

  தமிழ் நாட்டிற்கு வெளியே உள்ள இந்தியத்துணைக்கண்டத்தினர் தமிழின் சிறப்பை அறிவதில்லை. அறிந்திருந்தாலும் தமிழைப் புறக்கணிப்பதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கு மாறாக மாநிலங்களவையில் தமிழுக்காகக் கொடி தூக்கினார் ஒருவர்.அவர், தமிழ் நாட்டவர் அல்லர். உத்தரகண்டு மாநிலத்தைச் சேர்ந்தவர். அதுவும் சமய(மத)வெறிபிடித்த ‘இராசுட்ரிய சுயம்சேவக்கு சங்கம்’ என்ற நாட்டுத்தற்தொண்டுக் கழகத்தின் பல பொறுப்புகளில் இருந்தவர். இவ்வமைப்பு நடத்தும் பாஞ்சசன்யா’ என்னும் இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகள் இருந்தவர்.ஊடகவியலாளராகவும் மக்கள் நலத் தொண்டராகவும் நன்கறியப்பெற்றவர். பழங்குடி மக்களின் நலனுக்காகப்பாடுபட்டு வருபவர்.படக்கலைஞர், கட்டுரையாளர், படைப்பாளர் எனப் பல வகைகளில்…