அகத்தியர் என்ற சொல் தமிழே! – அ.சிதம்பரனார்

அகத்தியர் என்ற சொல் தமிழே!   அகத்தியர் என்ற சொல்லை அகத்தியம் என்ற வடசொல்லின் திரிபு என நம் நாட்டில் பலர் நம்பி வருகிறார்கள். அகத்தியம் என்பது அகத்தி என்ற ஒரு கீரைவகைப் பெயரின் அடிப்படையில் தோன்றியது ஒன்றாம். தமிழில் அகத்தி என்பது இருத்தல் போலவே மலையாளத்திலும் அகத்தி என்ற சொல் உண்டு.  செந்தமிழ்க் காவலர் அ.சிதம்பரனார்: தமிழோசை: பக்கம்.48

தெய்வம் தமிழ்ச்சொல்லே! –

  சிலர் தெய்வம் வேறு; கடவுள் வேறு என்பர். சிலர் தெய்வம் வட சொல், கடவுள் தென் சொல் என்பர். தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்லே. தெய்வமும், கடவுளும் ஒன்றே. ‘தெய்வம்’ என்ற சொல் ‘தேய்’ என்பதினின்றும் தோன்றியிருக்கக் கூடும். உயிர்களின் துன்பத்தைத் தேய்ப்பது தெய்வம். மக்கள் கடவுளை நினைக்கத் தொடங்கியது தம் துன்ப நீக்கத்திற்காகவே. இன்றும் பலர் கடவுளை நினைப்பது தமக்குத் துன்பம் வரும் காலத்தினால் தான். ஆதலின் ‘தெய்வம்’ எனும் தமிழ்ச் சொல் ‘தேய்’ என்ற அடியினின்று தோன்றியதாகக் கொள்ளலாம்….