(பூங்கொடி 4 – கவிஞர் முடியரசன்: கதைச் சுருக்கம் தொடர்ச்சி) தமிழ்த் தெய்வ வணக்கம் தாயே உயிரே தமிழே நினை வணங்கும் சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே தலை நி ன்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீயிங் கிலை யென்றால் இன்பமெனக் கேது. பாவால் தொழுதேத்திப் பாரில் நினையுயர்த்தும் ஓவாப் பணிசெய்ய உன்னுகின்றேன் – நாவாழும் மூவா முதலே முழுமைபெறும் செம்பொருளே சாவா வரமெனக்குத் தா. தென்பால் உகந்தாளும் தெய்வத் திருமகளே  என்பால் அரும்பி எழுமுணர்வை – அன்பால் தொடுத்தே அணிதிகழச் சூட்டினேன் பாவாய்…