(தமிழ் வளர்த்த நகரங்கள் 15 – அ. க. நவநீத கிருட்டிணன்: நெல்லைக் கோவிந்தர் – தொடர்ச்சி) தமிழ் வளர்த்த நெல்லை மதுரை மாநகரில் பாண்டியர்கள் தமிழை வளர்த்தற்கு அமைத்த கடைச்சங்கம் மறைந்த பிறகு தமிழகத்திலுள்ள பல நகரங்களிலும் வாழ்ந்த வள்ளல்களும் குறுநில மன்னர்களும் தமிழைப் பேணி வளர்த்தனர். ஆங்காங்குத் தோன்றிய தமிழ்ப்புலவர்களை ஆதரித்துப் போற்றினர். சமயத்தைக் காத்தற்கென்று முன்னேர்களால் நிறுவப்பெற்ற அறநிலையங்களாகிய மடாலயங்களும் சமயத் தொடர்புடைய தமிழ்ப் பணியை ஆற்றின. அவ்வகையில் திருவாவடுதுறை ஆதீனமும் தருமபுர ஆதீனமும் திருப்பனந்தாள் ஆதீனமும் தலைசிறந்து நிற்பனவாகும்….