35.வேதங்கள்பெண்களைப்போற்றுகின்றனஅல்லவா?+ 36.சனாதனத்தில் யாவரும் சமம் என்று பொய்யாகக் கூறிவருகிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34-தொடர்ச்சி) ஆமாம்  இது பொய்தான். சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போம் அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் இறப்பிற்குக் காரணம் சூத்திரன் ஒருவன் தவம் மேற்கொண்டுவருவதுதான் என நாரதர் இராமரிடம் கூறினார், இராமர் அவ்வாறு தவமிருந்த சம்புகனைத் தேடிச்சென்று அவனைத் தவக்கோலத்தில் கண்டான். அக்கணமே தன் வாளால் அவன் தலை வேறு உடல் வேறாகும்படி வாளால் வெட்டிக் கொன்றான். சூத்திரன் தவமிருக்கக்கூடாது என இராமரும் நாரதருமே கூறுகையில் சாதாரண மக்கள் என்ன எண்ண மாட்டார்கள். இத்தகைய சனாதனத்தை நாம் வரவேற்பது முறையா?…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 027. தவம்

(அதிகாரம் 026. புலால் மறுத்தல் தொடர்ச்சி)   01. அறத்துப் பால் 03.துறவற இயல் அதிகாரம் 027. தவம்   தம்துயர் பொறுத்தல், துயர்செய்யாமை, தூயநல் அறச்செயல்கள் செய்தல்.   உற்றநோய் நோன்றல், உயிர்க்(கு)உறுகண் செய்யாமை,    அற்றே, தவத்திற்(கு) உரு.        துயர்பொறுத்தல், உயிர்கட்கும் செய்யாமை        தூய தவத்தின் இலக்கணம்.   . தவமும், தவம்உடையார்க்(கு) ஆகும்; அவம்,அதனை    அஃ(து)இலார், மேற்கொள் வது.        மெய்த்தவத்தார் தவக்கோலம் சிறப்பு;        பொய்த்தவத்தார் தவக்கோலம் பழிப்பு.   துறந்தார்க்குத்…