இந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா? -இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தியர் என்று  உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா?   ஒருவன் எந்த நாட்டான் என்பது அரசியல் சூழலுக்கேற்ப மாறக்கூடியது. ஆனால், எந்த இனத்தான்என்பது பிறப்பிலேயே அமைந்து இறப்புவரை  – ஏன்,அதற்குப்பின்னரும் – நிலைப்பது. எனவே இந்தியன் என்பது நிலையற்றது. ஆனால் தமிழன் என்பது நிலையானது. தமிழ் மக்கள் இந்தியர்களாக அரசியல் அமைப்பின் கீழ் மாற்றப்பட்டதால் இழந்தவைதான் மிகுதி. இழப்பு என்பதும் ஒரு  முறை ஏற்பட்டதன்று. தொடர்ந்து இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர் தமிழ் மக்கள்.    இன்றைய, கேரள, ஆந்திர, தெலுங்கானா,…

செய்தியாளர் வீட்டை நொறுக்கியது தொடர்பான முறையீடு

  பதிவஞ்சல் – அஞ்சல் அட்டை ஒப்புகையுடன் அனுப்புநர் எசு.சபியுதீன்(செய்தியாளர்) 42 அ., .பட்டகால்தெரு, திட்டச்சேரி-609 703. நாகப்பட்டினம் மாவட்டம் பேசி : 98425-22442 பெறுநர் மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை-600 009. பொருள்: என்னையும் என்குடும்பத்தாரையும் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நாகப்பட்டினம் மாவட்டம்-திட்டச்சேரி பேரூராட்சித்தலைவர் இரவிச்சந்திரன் (தி.மு.க)தலைமையில் அடையாளம் தெரியாத 40க்கும் மேற்பட்டவர்கள் வீட்டை அடித்து நொறுக்கியது – தொடர்பாக   ஐயா   நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகின்றேன். என்னுடைய வருமானத்திற்கு வீட்டில் செடி வளர்ப்புத்…

ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!

  தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனைத் தாக்கியது அருளற்ற செயல்!   கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும்…