(கவிஞர் முடியரசனின் பூங்கொடி 29 : கல்லறை காண் காதை – தொடர்ச்சி) பூங்கொடிதாமரைக்கண்ணி அறிவிப்பு கோமகன் ஆயிழை இவள்மேற் கொண்டகாமந் தணிந்து கழிந்தனன் அல்லன்,படிப்பதும் இதனுள் பழுதுகள் புரியின் 30அடுத்தவர் ஒறுப்பர் ஆதலின் புறத்தே வருமிடைக் காண்பான் வழியிடை ஒதுங்கிஇருத்தலுங் கூடும் இதுநீர் ஒர்ந்துதிருத்தகு நல்லீர்! தெருவழிச் செல்லேல்பொழிலின் பின்புறம் பொருந்திய ஒருசிறு 35வழியுள தவ்வழி மருங்கிற் செல்லின்சுடுகா டொன்று தோன்றும்; ஆண்டுக்கடுநவை உறாஅது; கலங்கேல், அந்செறிதாண்டிச் செல்கெனத் தாமரைக் கண்ணி வேண்டி நின்றனள், விளங்கிழை அல்லி 40 அல்லி அஞ்சுதல் பினஞ்சுடு…