‘தொன்று நிகழ்ந்ததனைத்தும் உணர்ந்திடும் சூழ்கலை வாணர்களும் இவள் என்று பிறந்தவள் என்று’உணர முடியாத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த மக்கள் இன்று தம் நிலை கெட்டுத் தறிகெட்டுத் தாழ்வுற்று வறுமை மிஞ்சி வீழ்ந்து கிடக்கும் நிலை ஏன்? ‘தாய்த்திருநாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை மாய்த்திட விரும்பாமல்’ ‘மானமொன்றிலாது மாற்றலர் தொழும்பராய் ஈனமுற்றிருப்பது’ஏன்? ‘சொந்த நாட்டிற் பரர்க் கடிமை செய்தே வாழ்ந்திடோம்-இனி-அஞ்சிடோம்’என்று உரைக்காமல், ‘நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி’ ‘கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்றலன்றி’ ‘சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதற் கண்டும் சிந்தை இரங்காமல்’வீழ்ந்து கிடப்பதேன்? ‘ஓராயிர…