தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்  பேரா.சி.இலக்குவனார் மாணவப்பருவத்தில் விடுமுறைக்காலங்களில் நண்பர்கள் மூவரை இணைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் தனித்தமிழ் பொழிவுகள் நடத்தினார்; தமிழின் பெருமை, தமிழ் இலக்கியச் சிறப்பு, அயற் சொற்கள் கலப்பின்றித் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டியதன் இன்றியமையாமை முதலானவற்றை வலியுறுத்தினார். முத்தமிழ்க்காவலர், செந்தமிழ் மாமணி எனப் போற்றப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் மாணவப் பருவத்தில் இருந்தே தனித்தமிழ்ப் பாவலராகவும் தனித்தமிழ்ச் சொற்பொழிவாளராகவும்  திகழ்ந்து தனித்தமிழ்க் காப்பிற்குத் தொண்டாற்றித் தனித்தமிழ்க் காவலராகப் போற்றப்படுகிறார்.  பள்ளியில் படிக்கும் பொழுது தன்மதிப்பு இயக்கப் பற்றாளரான ஆசிரியர் அறிஞர் சாமி…

தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்

தமிழில் உரையாடு! எழுது! பெயர்களிடு என முழக்கங்க ளாலும் தமிழ் உணர்வு ஊட்டிய இலக்குவனார்     கல்விப்பணிகளுடன் களப்பணிகளும் இதழ்ப்பணிகளும் ஆற்றித் தமிழை வளர்த்தும் பரப்பியும் காத்தும் வாழ்ந்த ஒரே பேராசிரியர் தமிழ்ப்போராளி இலக்குவனார் மட்டுமே  மாணவப்பருவத்திலேயே தனித்தமிழ்ப் பொழிவுகள் ஆற்றி மக்களிடையே தமிழைப்பரப்பிய செம்மல் இலக்குவனார்.                       படிக்கும் பொழுதே தனித்தமிழ்ப் பாவியம் படைத்த பாவலர் இலக்குவனார். பயின்று கொண்டே  தொல்காப்பிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதிய தொல்காப்பிய அறிஞர் இலக்குவனார். குறள்நெறி, சங்க இலக்கியப் பரப்புரைப் பணிகளை இளமையில் தொடங்கி. வாணாள் இறுதி…