ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஈழத்தமிழர்களே! ஊர்ப்பெயர்களைச் சிதைக்காதீர்கள்!   அயலவர்கள் அவர்களின் மொழி உச்சரிப்பிற்கேற்ப நம்  ஊர்ப்பெயர்களை உச்சரித்தனர். திருநெல்வேலியைத் ‘தின்ன வேலி’ என்றும் திருவல்லிக்கேணியை ‘டிரிப்பிளிகேன்’ என்றும் சொல்வதுபோல் எண்ணற்ற ஊர்களை இவ்வாறுதான் தவறாக நாம் தமிழிலும் ஒலித்தோம். ஒருபுறம் ஆரியமயமாக்கப்பட்ட பெயர்கள் மறுபுறம் தவறான உச்சரிப்பிலான பெயர்கள் என இருபுறமும் தாக்குதல் நடைபெற்றது. திராவிட இயக்க எழுச்சியாலும் தனித்தமிழியக்கத்தினர் தொண்டினாலும் தமிழறிஞர்களின் ஆற்றுப்படுத்தினாலும் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் தமிழ்மய மாற்றங்கள் தேவை.   இவ்வாறு நம்மிடையே குறை  வைத்துக்கொண்டு, ஈழத்தமிழர்களை மட்டும் குற்றம்…

நீறு பூத்த நெருப்பு 1/2 – புகழேந்தி தங்கராசு

நீறு பூத்த நெருப்பு 1   ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ – என்பதைப் போலவே, ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்’ – என்பதும் இலங்கைக்குப் பொருந்தாது போலிருக்கிறது. ஐ.நா.வும் உலக நாடுகளும் மிதிமிதியென்று மிதித்தும் இம்மியும் நகரவில்லை இலங்கை. இவர்கள் உண்மையாகவே மிதிக்கிறார்களா, முன்பு போலவே மிதிப்பது போல நடிக்கிறார்களா என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.   ‘ஐ.நா குழுவையெல்லாம் நுழைய விடவே முடியாது’, என்று தொடர்ந்து அடம்பிடித்து வந்த இலங்கையின் இடுப்பெலும்பை முறித்தவர், பிரிட்டன் தலைமையமைச்சர் தாவீது கேமரூன்…

கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?

கண்டுபிடிக்கப்பட்டது இனஅழிப்பு வதை முகாம் : நாம் என்ன செய்யப் போகிறோம்?   திருகோணமலையில் இயங்கிய கமுக்க முகாம் என்பது தடுப்பு முகாம் அல்ல. அது.இனஅழிப்பு வதை முகாம்.   வகைதொகையில்லாமல் ஓர் இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்களைக் கமுக்க இடத்தில் வைத்து ஒரு வேற்றின அரசின் படைகள் சித்திரவதை செய்து படுகொலை செய்வதென்பது இனஅழிப்பு உள்ளடக்கங்களைக் கொண்டது.  யூதர்களை இனஅழிப்பு செய்ய கிட்லர் பயன்படுத்திய ஆசுட்டுவிச்சு படுகொலை முகாமிற்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் திருகோணமலை இனஅழிப்பு வதைமுகாம்.   பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டோர்…