௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் – வி.பொ.பழனிவேலனார்

(௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰உ. பேச்சுவழக்கில் பிழையாகப் பலுக்கப்படும்   சொற்களும் திருத்தமும் தமிழ்நலம் பேணும் தகையோர்க்கும், தமிழ் பயிற்றும் தமிழறிஞர்க்கும், தமிழாய்வு செய்யும் தனியர்க்கும் சிந்திப்பதற்கு ஒன்றுள்ளது. தமிழ்மொழி ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகப் பல சீர்கேடுகளுக்கு உள்ளாகி நலிவுற்று வருகிறது. இன்று தமிழ்மொழி ஒரு பல்கலப்பு மொழியாகக் காட்சியளிக்கிறது. தமிழில் எழுதினாலோ, பேசினாலோ பலர்க்குப் புரியவில்லை. அப்படிச் செய்பவர் ஏளனப் பேச்சுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளவர்க்குத் தமிழ் புரியவில்லை என்றால் தமிழ் வேறு எந்த நாட்டிற்குப் போகும்? தமிழில்…

௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை – வி.பொ.பழனிவேலனார்

(௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰க. தமிழ் கற்பிக்க வேண்டிய முறை இன்று தமிழ்நாட்டுத் தொடக்கப் பள்ளிகளில் தமிழ்ப்பாடம் கற்பிக்கும் முறை தவறானது.  ஆங்கிலம் கற்பிக்கும் முறையைப் பின்பற்றியே தமிழும் கற்பிக்கப்படுகிறது. ஆனால், பண்டைக்காலத்தில் தமிழ் கற்பிக்கக் கையாண்ட முறையே தமிழைப் பொறுத்தவரை சரியானதாகும். அம்முறையில் கற்றவர்தாம் பண்டைய புலவர் பெருமக்கள். பிழையின்றி எழுதவும், பேசவும், அம்முறை பெரிதும் உதவியது. ஆனால், இன்றைய முறையில் தமிழ் கற்றவர், புலமைப்பட்டம் பெற்றிருந்தும் பிழையின்றி எழுதத் திணறுகின்றனர். தமிழ் கற்பிக்க, எழுத்துக் கூட்டிப் படிக்கும் முறையே …

க0. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா?-வி.பொ.பழனிவேலனார்

(௯.  பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௰. தமிழ்நாட்டில் தமிழ் நிலைக்குமா? க. தமிழ் மொழியுடன் வேற்றுமொழிச் சொற்கள் பெருமளவு கலக்கப்பட்டு பல்லாயிரம் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துவிட்டன. உ. தமிழ்மக்கள் பேச்சிலும், எழுத்திலும் தமிழ்ச்சொற்களைக் காண்பது அரிதாகிவிட்டது.௩. தமிழ்நாட்டில் வாழும் தமிழ்மக்களின் பெயர்கள் தமிழாக இல்லை.௪. தமிழ்நாட்டில் உள்ள கடைகள், தொழிலகங்களின் பெயர்கள் தமிழ்மொழியில் எழுதப்படவில்லை.ரு. தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்கள் பல தமிழல்ல. தமிழில் எழுதியுள்ள பெயர்களும் பிழைபட எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுத் தெருக்களில் தமிழ் வழங்கவில்லை.எ. தமிழில் இப்பொழுது இந்திச் சொற்கள்…

௯.  பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா?-வி.பொ.பழனிவேலனார்

(அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்-தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் ௯.  பிற மொழிக் கலப்பால் தமிழ் வளருமா? பிறமொழிக் கலப்பால் பிற மொழிகள் வளரலாம்.  ஆனால், தமிழ் அதற்குப் புறம்பானது.  தமிழ் “உயர்தனிச் செம்மொழி” என்பதைப் பலர் அறியாமையால், பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்தால் தமிழ் வளம் பெறும் என்கின்றனர். இத்தகையோர் மொழி நூலறிவு அற்றவராவர். சமற்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்ததென்றும், அதனால் தமிழ்வளம் பெற்றதென்றும் பிதற்றும் பேதையர் பலராவர். இவர்தம் கூற்று முற்றும் பொய்யே! வடமொழிச் (சமற்கிருதம்) சொற்கள் தமிழில் கலந்தமையால் ஆயிரக்கணக்கான தமிழ்ச்சொற்கள்…

அ. தமிழும் – தமிழரும் -புலவர் வி.பொ.பழனிவேலனார்

(எ. தமிழும் – வடமொழியும்-புலவர் வி.பொ.பழனிவேலனார் – தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள் அ. தமிழும் – தமிழரும் தமிழ்நாட்டில் இன்று ஆரியர், ஆந்திரர், கன்னடர், துளுவர், கேரளர், துருக்கியர், ஆங்கிலோ-இந்தியர் முதலிய பலர் வாழ்கின்றனர். ஆயினும், பல்லாண்டுகளாக இங்கு வாழ்ந்து வருவதனால் இவர்கள் தம் தாய்மொழி “தமிழ்” என்றே  மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் போதும், படிக்கவும், வேலைக்கு விண்ணப்பங்கள் கொடுக்கும் போதும் பதிவு செய்கின்றனர். அவர்கள் இல்லங்களில் ஒருவர்க்கொருவர் உரையாடும் போதும், உறவினர்களுடன் பேசும்போதும், அவரவர் உண்மையான தாய்மொழிகளாகிய சமற்கிருதம், தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம்,…

உ. உயர்தனிச் செம்மொழி-புலவர் வி.பொ.பழனிவேலனார்

(தமிழ்: க. தமிழ் வளர்ப்போம்-வி.பொ.பழனிவேலனார்- தொடர்ச்சி) திருத்துறைக்கிழார் கட்டுரைகள்        உ. உயர்தனிச் செம்மொழி ஒருவர் (எவர் பெயரையும் குறிப்பிட விரும்புகிலேம்)  தமிழில் பேச்சுமொழியை ஒழுங்குபடுத்திச் செப்பம் செய்யவேண்டும் என்கின்றார்;  வேறொருவர், பிறமொழிச் சொற்களைக் கலந்தால்தாம் தமிழ் வளர்ச்சியடையும்  என்கின்றார்;  இன்னொருவர், அறிவியல் கருத்துகளைத் தமிழில் எழுத, பேசப் பிறமொழிச் சொற்களை அவ்வாறே எடுத்தாள வேண்டும்.  அன்றுதான் அறிவியல்தமிழ் வளரும் என்று சொல்கின்றார்; ஆங்கில மொழியைப் பின்பற்றி எழுத வேண்டும் என்கின்றார் மற்றொருவர்; ‘தமிழ்க் கழகங்கள் முத்தமிழ் வளர்த்தன என்பதெல்லாம் கட்டுக்கதை;  தமிழ்ச்சங்கள் இருந்தனவென்பதற்குச்…

சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை  முன்னுரையும்

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை-தொடர்ச்சி) சுவைத் தமிழின் மூதறிஞர் மறைமலையார் பாவாணர் அடிச்சுவட்டில் மாண்பார்ந்த தனித்தமிழ்க்குப் பெருமை சேர்த்த நிறைபுலமை யாளர்நம் பழனிவேலர் நினைவெல்லாம் மொழிமானம் தாங்கி நிற்கும் குறையில்லாப் பெருங்கொள்கை யாளர்! அந்நாள் கோதறுசீர் ‘மாணாக்கன்’ இதழின் மூலம் முறையான தமிழ்த்தொண்டு புரிந்த நல்லார்! மூப்பினிலும் தமிழ்யாப்பின் மரபில் வல்லார்! உரமுடையார்! திறமுடையார்! தமிழைக் காக்கும் உணர்வுடையார்! போர்க்குணமும் உடையார்! நெஞ்சில் கரவறியார்! செந்தமிழைக் காப்ப தற்குக் களம்புகுவார்! தன்னலத்தைச் சிறிதும் எண்ணார்! வரவறியார்! பொருள்சேர்க்கும் வாழ்வைக் காணார்! வாழ்வுவளம் எல்லாமுமு்…

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை

முனைவர் ப.தமிழ்ப்பாவை தொகுப்பில் திருத்துறைக் கிழார் கட்டுரைகள் அணிந்துரை வை.மு.கும்பலிங்கன்    திருத்துறைக்கிழார் எழுதிக் குவித்த எழுத்துகளாம் பூந்தோட்டத்தில் காய், கனித்தோப்பில் புகுந்து, சுற்றிப்பார்த்தும், உண்டு மகிழ்ந்தும் களிப்போம். இவர், தாம் உருவாக்கிய எழுத்து என்னும் கருத்துத் தோட்டத்தை 1.தமிழ், 2.தமிழர், 3.தமிழ்நாடு என மூவகைப்படுத்தி, சுற்றுவேலி கட்டி அமைத்துள்ளார். தமிழ்த் தோப்பில் 14 கட்டுரைகளும், தமிழர் தோப்பில் 19 கட்டுரைகளும், தமிழ்நாட்டுத் தோப்பில் 9 கட்டுரைகளுமாக மொத்தம் 42 கட்டுரைகளைத் தொகுத்து அவர்தம் மகளார் முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை இங்கு  தந்துள்ளார். தற்போது, இத்தோப்பின்…