திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1

திருவள்ளுவர்: 1   சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்தபாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப்படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில், திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 4

 (மார்கழி 13, 2045 / திசம்பர் 28, 2014 தொடர்ச்சி)   10.2. இறையனாரதுநிறைபாடல்— 03 சொல்தொடர்: என்றும்….நின்றுஅலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய் மன்புலவன் வள்ளுவன் வாய்ச்சொல். பொருள்உரை      எக்காலத்தும் நின்று நிலைக்கும்படி மலர்ந்து தேன்சொரியும் தன்மையது, நிலைபெற்ற புலவர் திருவள்ளுவர் வாயிலிருந்து பிறந்தசொல் திருக்குறள். நுட்பங்கள் சொல்: தேன் தேனின்மருத்துவக்குணங்கள்      கண்பார்வையைத்தெளிவாக்கும்     ]இருமலைத்தீர்க்கும   குருதிக்கொதிப்புக்குச்சிறந்தமருந்தாகும்      குருதியைத்தூய்மைப்படுத்தும்      கொழுப்பைக்குறைக்கும்      இதயத்தின்ஆற்றலைக்கூட்டும் தேன்உடல்நோய்களைத்தீர்க்கும். திருக்குறள் உடல்நோய்களை வராமல் தடுக்கும்; வரும்முன் காக்கும். கற்க95—ஆவது அதிகாரம் மருந்து. தேன்…

திருவள்ளுவமாலையின் சொல்நுட்ப மேலாண்மைத்திறன்கள் – பகுதி 2

(கார்த்திகை 28, 2045 / 14 திசம்பர் 2014 தொடர்ச்சி) 6.0. சொல்நுட்பத்தகவு  நுட்பம்அமைந்தசொல்லின்தகவு / தகைமை எப்படி இருத்தல் வேண்டும் என்று ஆய்தலும் இங்குத் தேவையாகின்றது. அடைப்புக்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள எண்கள் திருக்குறட் பாக்களின் எண்கள்.      ஆக்கம் தருவதாய் இருத்தல் [0642]. கேட்போரை ஈர்த்து, அவரது உள்ளத்திற்குள் சென்று பதியும் திறன்உடைத்தாதல் [0643], அறனும், பொருளும் அளிக்கும் திறன் பெற்றிருத்தல் [0644], நுட்பச்சொல்லைச் சொல்லும்பொழுது, அச்சொல்லை வெல்லும் வேறு ஒரு சொல் இல்லாதபடிச், சொல்லும் சொல்லே வெல்லும்படி அமைதல் [0645], கேட்போர் விரும்பும்படித்…

திருக்குறளும் பொது நோக்கமும் 3 – ‘தமிழ்ப் பெரும்புலவர்’ பேராசிரியர் சரவண ஆறுமுக(முதலியா)ர்

  (ஆனி1, 2045 / 15 சூன் 2014 இதழின் தொடர்ச்சி) ‘‘ஆற்றல் அழியுமென் றந்த ணர்கனான் மறையைப் போற்றியுரைத் தேட்டின் புறத் தெழுதா – ரேட்டெழுதி வல்லுநரும் எல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினு மாற்றல் சோர்வின்று’’ – கோதமனார் காலஞ்சென்ற தமிழறிஞர் திருவனந்தைச் சுந்தரம் பிள்ளையவர்களும், ‘‘வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர்க ளுள்ளுவரோ மநுவாதி யொரு குலத்துக் கொருநீதி’’. என்று இந்நூலின் சமரசப் பான்மையை இனிது விளக்கினார். உரையாசிரியராம் பரிமேலழகரும், ‘‘எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லோர்க்கும் பொதுப்படக் கூறுதல் இவருக்கு…