(வெருளி நோய்கள் 1271 -1275 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1276 -1280 திரைப்படம் அல்லது திரையரங்குபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் திரைப்பட வெருளி.திரைப்படம் பார்ப்பதற்கும் திரையரங்குகள் செல்வதற்கும் காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இருட்டு வெருளிக்கு ஆளானவர்களுக்கும் திரைஅரங்கு இருட்டு அளவற்ற பேரச்சத்தை அளிக்கிறது. திரையரங்க வசதிக் குறைபாடுகளால் எரிச்சலுற்றும் வெறுப்பு கொள்கின்றனர். திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகள், கூச்சமளிக்கும் நெருக்கமான காட்சிகள் போன்றவற்றாலும் திரைப்பட வெறுப்பு கொள்வோர் உள்ளனர். இவற்றைப்பார்க்கும் இளம் பருவத்தினர் கெட்டுப்போவர் எனவும் இவற்றின்மீது வெறுப்பு கொள்கின்றனர். இப்பொழுது திரையரங்கு…