அகநானூற்றில்  ஊர்கள் :7/7 – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 6/7 இன் தொடர்ச்சி   அகநானூற்றில்  ஊர்கள் -7/7   வல்லம்     மழைபோல் செரியும் அம்பனையும், மேகம் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழரது அரண் கொண்டது வல்லம் எனும் ஊராகும்.                 “……………..சோழர்                 வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புரமிளை” (அகநானூறு 336)                 “நெடுங்கதி நெல்லின் வல்லம்”                                      (அகநானூறு  356) நெல்வளம் மிக்க ஊர் வல்லம் என்பதை மேற்கண்ட அடிகள் விளக்குகின்றன. வாகை       வாகை மரம் நிற்றலால் வாகைப் பெருந்துறை எனப்பட்டது. வாகைப்போர்…

அகநானூற்றில்  ஊர்கள் : 6/7- தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 5/7 இன் தொடர்ச்சி)     அகநானூற்றில்  ஊர்கள்  – 6/7     நீடூர்                 எவ்வி என்று குறுநில மன்னனின் ஊர். குறிதப்பாத வாட்படையை உடையவன். யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவன் என்பதை,                 “யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்                 …………..எவ்வி ஏவல் மேவார்”                           (அகநானூறு 260)                 “பொலம்பூண் எவ்வி நிழல் அன்ன”            (அகநானூறு 366)…

அகநானூற்றில்  ஊர்கள் : 5/7 – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 4/7 இன் தொடர்ச்சி) அகநானூற்றில்  ஊர்கள் : 5/7 கானல்அம்பெருந்துறை                 தித்தன் வெளியன் என்ற அரசன் ஆண்டது இவ்வூராகும். இஃது அழகிய கடற்கரைச் சோலையையுடைய பெருந்துறை என்னும் பட்டினத்துக்கு உரியது. பிண்டன் நன்னனை வென்று வாகை சூடிய இடமாக திகழ்வதனை,                 “……..தித்தன் வெளியன்                 இரங்கு நீர்ப் பரப்பின் கானல்அம் பெருந்துறை” (அகநானூறு152, 210, 280, 300) என்ற அடிகள் மூலம் அறியலாகிறது.   குடந்தை                 வெல்லும் வேலையுடைய வெற்றி பொருந்திய சோழ மன்னரின் குடந்தை என்பதை,…

அகநானூற்றில்  ஊர்கள்: 4/7  – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 3/7 இன் தொடர்ச்சி   அகநானூற்றில்  ஊர்கள் -4/7   ஊனூர்   ஊனூர், தழும்பன் என்ற குறுநில மன்னன் ஆண்ட ஊர் ஆகும். இவ்வூர் மருங்கூர் பட்டினத்திற்கு அருகில் உள்ளது. முழங்கும் கடல் அலைகள் காலைப்பொழுது கரைவந்து மோதும் நெல்வளம் மிக்க ஊர். காதல் பறவையான மகன்றில் பறவைகள் வாழுமிடமாக ஊனூர் திகழ்கின்றது என்பதனை, “பழம்பல் நெல்லின் ஊனூர் ஆங்கன்”                     (அகநானூறு 220) மன்னன் பெருங்கொடை வழங்கும் சிறப்பினை உடையவன் என்பதை, “……..தழும்பன்                  கடிமதில் வரைப்பின் ஊனூர் உம்பர்”                     (அகநானூறு…

அகநானூற்றில்  ஊர்கள் 3/7 – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 2/7 இன் தொடர்ச்சி அகநானூற்றில்  ஊர்கள் -3/7  ஆலங்கானம் (தலையாலங்கானம்)    ஆலங்கானம் என்பது தலையாலங்காடு என்று வழங்கப்படுகிறது. தொண்டை நாட்டிலுள்ள இவ்வூர் தேவாரப்பாடல் பெற்ற தலமாகத் திகழ்கின்றது. பாண்டிய நெடுஞ்செழியனின் பகைவரான நெடுநில மன்னனான சேரர், சோழர் இருவரும் குறுநில மன்னரான நிதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐவரையும் போரில் வென்றதால் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான்.                 “……கொடித் தேர்ச் செழியன்                 ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப                 சேரல், செம்பியன்,…

அகநானூற்றில்  ஊர்கள்  – 2/7: – தி. இராதா

அகநானூற்றில்  ஊர்கள்  – 2/7 அழுங்கல்      பல விழுதுகளைக் கொண்ட ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் பறவைகளின் ஒலியைக் கொண்ட ஊர் அழுங்கல் ஆகும்.      “பல்வீழ் ஆலப்போல      ஓலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே” (அகநானூறு 70)      “என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே”  (அகநானூறு 180) என்னும் வரிகள் உணர்த்துகின்றன.      “அன்றை அன்ன நட்பினன்       புதுவோர்த்து அம்ம அவ் அழுங்கல் ஊரே” என்று குறுந்தொகையும் அழுங்கல் ஊரின் சிறப்பை எடுத்துரைக்கின்றது.      கரிய கூந்தலையும் திருத்த முறச்…

அகநானூற்றில்  ஊர்கள் 1/7 – தி. இராதா

அகநானூற்றில்  ஊர்கள்  (1/7)                                 ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’            சங்கக் காலத்தின் வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வது சங்க இலக்கியங்கள். எந்த இலக்கியத்திற்கும் இல்லாத தனிச்சிறப்புகள் சங்க இலக்கியத்திற்கு உண்டு. சங்க இலக்கிய நூல்களில் பல ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சில பெயர்கள் இன்றும் வழக்கில் மக்களால் வழங்கி வருகின்றன. அகநானூறு அகநானூறு சார்ந்த பாடல்களில் அகவாழ்க்கை மட்டும் அல்லாமல் அப்பாடல்களில் சங்கக்கால மக்கள் வாழ்ந்த ஊர்கள், தலைவன், மன்னன், மன்னனின் நாடு போன்ற…