இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா? – இலக்குவனார் திருவள்ளுவன்

இளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா? அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா?   இளைஞர்களின் நா இந்திப்பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்த  பொழுது –  திரும்பிய பக்கமெல்லாம் இந்தித்திரைப்பாடல்களே கேட்டுக் கொண்டிருந்த பொழுது – ஒட்டு மொத்த தமிழ்உலகையும் தன் இசையின்பால் ஈர்த்தவர் இளையராசா. அதற்காகத் தமிழுலகம் என்றைக்கும் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறது.   இளையராசா , தமிழ்ப்பற்றால் இந்தியிசையை ஓட்டிவிட்டார் என்று கூற முடியாது. இந்தி மெட்டுகளைத் தழுவாமல் தனக்கு எது  முடியுமோ அதனைத் தந்தார். அது நாட்டுப்புற இசை. காலங்காலமாக நிலைத்து…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – நூற்றொடர் அறிவிப்பு

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் –  நூற்றொடர் அறிவிப்பு   கோவை ஞானி அவர்களின் தமிழ்நேயம் 49 ஆவது வெளியீடாக  மாசி, தி.பி. 2043/ பிப்.கி.பி. 2012 வெளியீடாக வந்த நூல் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். அடுத்த வாரம் முதல்  வெளிவரும் இவ்விதழின் முன்அட்டை,  உள் குறிப்பு (திருமணப்பரிசு என்ற முறையில் நன்றி அறிவிப்பு), பின் அட்டை (நூலாசிரியர் இலக்குவனார் திருவள்ளுவன்  எழுதிய இந்நூல் பற்றிய கோவை ஞானி அவர்கள் குறிப்பு) ஆகியன விவரங்களுக்காகத் தரப்படுகின்றன. வருமிதழ் முதல் படைப்பு தொடரும்.

அணிற்பிள்ளை – தி.ஈழமலர்

கோடை முழுக்கக் கொண்டாட்டம்தான்!   பிறந்து ஓரிரு நாட்களே ஆன, இவ்வளவு சிறிய அணிற்பிள்ளையை இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே பார்த்து இரசிக்கும் வாய்ப்பு சின்னக்குட்டி அழகனைத்தவிர வேறு யாருக்கும் கிட்டியிராதுதான். அழகன் – பெயருக்கு ஏற்றாற்போல் அழகும் அறிவும் மிகுந்த துடிப்பான 3 வயதுக் குழந்தை.   அந்த அணில், இவர்கள் புதுமனை புகும் பொழுது பழைய வீட்டில் கிடைத்த பரிசு. அன்று, அந்தப் புது வீட்டில் அனைவரும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த பொழுது, அழகன் மட்டும் தாத்தாவின் அறையை அடிக்கடி நோட்டமிட்டு இருந்ததை அவன்…