(வெருளி நோய்கள் 1296 -1300 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 1301 -1305 கெட்ட மூச்சு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீயமூச்சு வெருளி.வாய்த்தூய்மையின்மை, பற்கள் சிதைவு, ஈறுகளில் சீழ் வடிதல் போன்ற காரணங்களால் வாயில் தீய நாற்றம் வருகிறது. வாயைத் தூய்மையாக வைத்துக்கொண்டு இதைத் தடுக்க வேண்டும். மாறாகத் தவறான எண்ணங்கள் கொண்டு தீய கற்பனைகளை வளர்ப்பது உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு நல்கும்.halitosis என்றால் கெட்ட மூச்சு.00 தீயன பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தீயன வெருளி.தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும் (குறள்…