தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙெ)  உலகத் தமிழ் மாநாட்டில் பேராசிரியர் இலக்குவனாரை எதிர்பார்த்து ஏமாற்றமுற்ற பிற நாட்டுஅறிஞர்களும் தத்தம் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குப் பேராசிரியரை  அழைத்தனர். பேராசிரியரும் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள் என ஒவ்வொரு பகுதியாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொழிகளின் தாயாம் தமிழின் சிறப்பைப் பரப்பத் திட்டமிட்டார். முதலில் திசம்பர் 1970 இல் பயணம் மேற்கொள்வதாக இருந்தார். இதுகுறித்து  11.10.70 குறள்நெறியில் வந்த செய்தி வருமாறு:  பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்களுக்கு உலகச் சுற்றுப்பயணச் செலவுச் சீட்டுகிடைத்துள்ளது. உலகப்…

செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார் -புலவர் செ. இராமலிங்கம். புதுவை

செந்தமிழ் வளர்த்த செம்மல் சி. இலக்குவனார்   இலக்குவனாரைப்போல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஒழுக்கமுடனும். தமிழ் உணர்வுடனும் பயிற்றுவித்தவரும் மாணவர்களைப் பண்படுத்தியவரும் வேறு யாருமிலர் என்பதற்குக் கல்விச் சாலைகளின் பட்டியலே சான்றாகும்.   சென்னை, மதுரை, அண்ணாமலை, ஐதராபாத்து உசுமானியப் பல்கலைக் கழகங்களில், பாடத்திட்டக்குழு உறுப்பினர், பேரவை உறுப்பினர், ஆட்சிக்குழு உறுப்பினர், போன்ற பொறுப்புகள் ஏற்றுத் திறமையுடன் புதுமையான பல திட்டங்கள் வகுத்தளித்துச் சிறப்புக்குரியவராய் விளங்கினார் இலக்குவனார்.   அரசியல் காழ்ப்பு, தமிழ் உணர்வின்மை, ஆங்கில மேலாண்மை, சாதியுணர்வு இவற்றுக்கிடையே இலக்குவனாரின் தமிழ்ப் பற்றும்….

சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்

பேராசிரியர் வணங்காமுடி, தமிழ்நாடு  அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக திசம்பர் 11 அன்று பதவி ஏற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டியில்  வேளாண் குடும்பத்தில் பிறந்த இவர்  இரு முதுகலைப்பட்டங்கள் , இரண்டு சட்ட முதுகலைப் படிப்பு, இரண்டு முனைவர் பட்டம் ஆகியனவற்றிற்கு உரியவர்.  அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியதோடு பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்குநராகப் பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி சமாதானம் அரசு பள்ளி ஆசிரியர். மகள் அன்பரசி சிங்கப்பூரில் ஆராய்ச்சி  அறிவியலராகப் பணியாற்றி…