தோழர் தியாகு எழுதுகிறார் 14 : அனல் கீழ் பனித் திரள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் – தொடர்ச்சி) அனல் கீழ் பனித் திரள்   காலநிலை மாற்றம் தொடர்பான தரப்புகளின் மாநாடு –27 (கொப்27) எகித்தில் நடந்து முடிந்துள்ளது. கொப்27 (COP27)  மாநாட்டில் ஐநா பொதுச் செயலர் அந்தோணியோ குத்தரசு ஆற்றிய உரையை — நரகத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற எச்சரிக்கையை — சென்ற மடலில் மேற்கோளாகக் கொடுத்திருந்தேன். மாநாட்டின் உருப்படியான விளைவு என்பது காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வின் வளர்ச்சிதான். காலநிலை மாற்றம் என்பது கற்பிதமன்று, அறிவியல் புனைகதையன்று. அஃது அறிவியல் அடிப்படையிலானது. அறிவியலின் துணைகொண்டுதான் அதை வெல்லவும் கூடும். இந்த அறிவியல் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது என்பது இம்மாநாட்டில் வெள்ளிடை மலையாக ஒளிர்ந்தது. இஃது அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மை: ஏடேறிய வரலாற்றில் கடந்த ஏழாண்டுக் காலம் போல் ஒரு வெப்பக் காலம் கண்டதே இல்லை….

தோழர் தியாகு எழுதுகிறார் 13 : ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு – தொடர்ச்சி) ததும்பும் கடல், தத்தளிக்கும் நாடுகள் துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தின் விளைவாக அழிவின் விளிம்பில் நிற்கும் மற்ற நாடுகள் எவை? தாழி அன்பர்களின் இந்தக் கவலைதோய்ந்த வினவலுக்கு, பொதுவாக பசிபிக்கு தீவுகள், ஆனால் அவை மட்டுமல்ல என்று விடையிறுக்கலாம். மேலும் துல்லியமாக மாலத்தீவுகள் உள்ளிட்ட சில நாடுகளை ஐநா அமைப்பின் காலநிலை வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர். 1900க்குப் பின் நாளது வரை கடல்மட்டம் 15 – 25 கீழ் நூறன் கோல்(centimeter) (6 முதல் 10…

தோழர் தியாகு எழுதுகிறார் 12 : பசிபிக்கு தவிப்பு

(தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று – தொடர்ச்சி) பசிபிக்கு தவிப்பு துவாலுவைப் போலவே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில் இருக்கும் மற்ற தீவுகள்பற்றித் தோழர் கதிரவன் கேட்டிருந்தார். பலருக்கும் அதே கேள்வி உண்டு. ஒரு வகையில் பார்த்தால் இந்தப் புவிக் கோளமே காலநிலை மாற்றத்தால் இடர்நிலையில்தான் உள்ளது. முன்னால் யார், பின்னால் யார் என்பதில்தான் வேறுபாடு. மேலும் கடலுக்குள் மூழ்கிப் போவது மட்டும்தான் கேடு என்பதில்லை. வேறு பல கேடுகளும் நம்மைச் சூழ்ந்துள்ளன. கடலுக்குள் மூழ்கிப் போவது என்ற கடைக்கோடி இடர்நிலையில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று

(தோழர் தியாகு எழுதுகிறார் 10: மா இலெனின் விளக்கமும் பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல் குறிப்பும் தொடர்ச்சி) காலநிலை மாற்றம் கற்பிதமன்று “மெய்ம்மைகளிலிருந்து உண்மைக்கு” என்பார் மா இலெனின். தரவுகளிலிருந்து முடிவுக்கு என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம். தரவுகள் இல்லாமல் சில முன்-முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவதால் பயனில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகள்  இல்லாமல் இந்தச் சிக்கலான போராட்டத்தை முன்னெடுக்க இயலாது. எகித்து நாட்டில் இப்போது காலநிலை மாற்றம் தொடர்பான உயர்நிலை மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டை ஒட்டி முதன்மையான சில காலநிலைத் தரவுகள் வெளிவந்துள்ளன. நேற்றைய இந்து (ஆங்கிலம்) நாளேட்டில் தரவு அணி…

தோழர் தியாகு எழுதுகிறார் 7 : முனைமுகத்தே துவாலு

(தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு? இன் தொடர்ச்சி) முனைமுகத்தே துவாலு காலநிலை மாற்றம் உலகை அச்சுறுத்தும் பெரும் நெருக்கடியாக முற்றி வருகிறது என்று சூழலியலர் எவ்வளவுதான் சொன்னாலும் அப்படியெல்லாம் இருக்காது என்று தன்னாறுதல் கொள்வதுதான் பாமர இயல்பு. ஆனால் பாமரரும் புறந்தள்ள முடியாத படி துவாலு நாட்டைப் பற்றிய செய்திகளால் காலநிலை மாற்றம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. துவாலு — பசிஃபிக் கடலில் அருகருகே அமைந்த ஒன்பது தீவுகளைக் கொண்ட ஒரு சின்னஞ்சிறிய தீவுக் கூட்டம். இவற்றில்…

தோழர் தியாகு எழுதுகிறார் 6: துவாலு தெரியுமா உங்களுக்கு?

(தோழர் தியாகு எழுதுகிறார் 5 இன் தொடர்ச்சி) துவாலு தெரியுமா உங்களுக்கு? துவாலு தெரியுமா உங்களுக்கு? சில நாள் முன்னதாகத்தான் நான் தெரிந்து கொண்டேன். இது ஒரு நாட்டின் பெயர். நேற்று ஐநா மனிதவுரிமைப் பேரவையில் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) என்ற திட்டத்தில் இந்தியாவின் முறை. அந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாட்டிலிருந்து நேரலையாகக் காணும் வாய்ப்பை மக்கள் கண்காணிப்பகம் ஏற்படுத்திக் கொடுத்தது. மொழிபெயர்ப்பாளனாக நான் பங்காற்றினேன். அப்போது தூதுவர்களின் இருக்கையில் நாடுகளின் பெயர்களை  எழுதி வைத்திருக்கக் கண்டேன். என் கண்ணில் அந்தப் பெயர் பட்டது….