பா.ம.க.எதிர்ப்பைக் கொள்கையாகக் கொள்ள வேண்டா!:திருமாவுக்கு வேண்டுகோள்! விடுதலைச்சிறுத்தைகளின் நல்ல கொள்கைகள் இடையே ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு எதிராகச் செயற்படுவதையே கொள்கையாகக் கொள்வது பெருந்தவறு என்பதை அதன் தலைவர் தொல்.திருமாவளவன் உணர வேண்டும். அனைத்துக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகளுடன் இருப்பது இயற்கை. என்றாலும் கொள்கை யடிப்படையிலும் அவற்றின் அடிப்படையிலான செயற்பாட்டு அடிப்படையிலும் வேறுபாடுகள் இருந்தாலும் ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை எதிரிக்கட்சிகளாக் கருதி பகைமை பாராட்டுவது நல்லதல்ல. தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான வி.சி.க.வும் பா.ம.க.வும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் ஒத்த கருத்துகளில் உடன்பட்டுச் செயற்படுவதுதான்…