உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்- ப. மருதநாயகம்

(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 4/5 10. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் பத்தாம் கட்டுரை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் குறித்தது. “தேவநேயப் பாவாணர், தமிழ்மொழியே முதல் மாந்தன் பேசிய மொழியென்றும் தமிழினமே முதலில் தோன்றிய மாந்த இனமென்றும் குமரிக் கண்டமே மாந்தர் முதலில் வாழ்ந்த நிலப்பரப்பென்றும் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டிற்கு வடமொழி இலக்கணம் பண்பாடு ஆகியவை பெரிதும் கடன்பட்டிருக்கின்றனவென்றும் தக்க சான்றுகளுடன் நாளும் முழங்கி வந்தவர்….

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4  தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 5. செம்மை  சொற்களும் சொற்றொடர்களும் வடிவிலும் பொருளிலும் இலக்கண முடிபிலும் வழாநிலை, வழுநிலை, வழுவமைதிநிலை என முந்நிலைப்படும். அவற்றுள், வழுநிலையில்லது செந்தமிழ் என்றும், அஃதுள்ளது கொடுந் தமிழ் என்றும், தமிழை இருவகையாக வகுத்தனர் இலக்கண நூலார். மக்கட்கு ஒழுக்க வரம்பு எத்துணை இன்றியமையாததோ, அத்துணை இன்றியமையாததே மொழிக்கு இலக்கண வரம்பும். சொற்களின் திருந்திய வடிவையும் ஓரிய லொழுங்கையும் தமிழிற்போல் வேறெம்மொழியிலுங் காண முடியாது. எ-டு: தமிழ்                                                     …

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 3 தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் தூய்மை     தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றி வளர்ந்த தனிமொழியாதலாலும், அதை நுண்ணறிவு மிக்க பொதுமக்களும் புலமக்களும் பண்படுத்தி வளர்த்தமையாலும், நீராவியையும் மின்னியத்தையும் துணைக் கொள்ளாத எல்லாக் கலைகளையும் அறிவியல்களையும் பண்டைத் தமிழரே கண்டறிந்துவிட்டமையாலும், ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும் நூல் வழக்குச் சொற்களும் இறந்துபட்ட இக்காலத்தும், எப்பொருள்பற்றியும், பழஞ்சொற் கொண்டும் புதுச்சொற் புனைந்தும், முழுத் தூய்மையாகப் பேசத் தமிழ் ஒன்றில்தான் இயலும். இவ் வுண்மையை அறிந்தே, தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து…

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 3 – ஞா.தேவநேயர்

(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 2 தொடர்ச்சி)   3 தமிழின் தனிப்பெருந் தன்மைகள் தாய்மை     பெற்றோரைக் குறிக்கும் அம்மை அப்பன் என்னும் குமரிநாட்டுத் தமிழ்ச்சொற்கள், ஆரியம் உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றில் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன.     நூன், நூம் என்னும் பண்டைத் தமிழ் முன்னிலைப் பெயர்கள், வடநாட்டு இந்தியில் து, தும் என்றும், இலத்தீனில் து, வேஃச்(ஸ்)  என்றும், கிரேக்கத்தில் தூ (சூ), ஃக(ஹ்)மேயிஃச்(ஸ்) என்றும் பழைய ஆங்கிலத்தில்  தூ, யி(யூ) என்றும், சமற்கிருதத்தில் த்வம், யூயம் என்றும் முறையே…

தமிழின் தனிப்பெருந் தன்மைகள் – ஞா.தேவநேயர்

1 தமிழின் தனிப்பெருந் தன்மைகள்     மூவாயிரத்திற்கு மேற்பட்ட உலக மொழிகளுள், இன்றும் பல்வேறு வகையில் முதன்மையாகவுள்ளது, பொன்னினும் மணியினுஞ் சிறந்ததாக வும், உணவினும் மருந்தினும் இன்றியமையாததாகவும், தெய்வமும் திருமறையுமெனக் கண்ணியமாகவும் நம் முன்னோர் போற்றி வளர்த்த செந்தமிழே யென்பது, முகடேறி நின்று முரசறைந்து விளம்பத்தக்க முழு வுண்மையாகும். அதற்கேதுவான தமிழின் தனிப்பெருந் தன்மைகள் வருமாறு: முன்மை     இஞ் ஞாலத்தில் மிகப் பழைமையான நிலப்பகுதி யென்று தமிழ் வரலாற்றால் அறியப்பட்டதும், நிலநூல், கடல்நூல், உயிர்நூல் ஆராய்ச்சி யாளரால் உய்த்துணரப்பட்டதும், மாந்தன் பிறந்தகமென்று மாந்தனூலாராற்…

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்

தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்த தமிழே! – தேவநேயப் பாவாணர்   [‘மருவே செறித்த’ என்ற திருப்புகழ் மெட்டு தனனா தனந்த தனனா தனந்த தனனா தனந்த தனதான என்ற வண்ணம்]   தனியே பிறந்து தனியே வளர்ந்து தனியே சிறந்து தரைமீது தனியே விரிந்து கவையே பிரிந்து கிளையே திரிந்து பலவாக முனிவோர் மொழிந்து முனமே திருந்தி முதனூ லெழுந்த மொழியாகி முருகால் நடந்த சவைமீ தமர்ந்து முகைவாய் மலர்ந்த தமிழாயே கனியா யருந்து முனையே மிகுந்து பயிலா மலுந்தன்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் – அறிவிப்பு தொடர்ச்சி) தமிழ்ப்போராளி  பேராசிரியர் சி.இலக்குவனார் [ங]  1.முன்னுரை  – முற்பகுதி   நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும்  உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார்….

பல்வகைச் சிறப்புடையது தமிழே!

பல்வகைச் சிறப்புடையது தமிழே!   உலக மொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள் தொண்மை, முன்மை, எண்மை (எளிமை) ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புகளை ஒருங்கேயுடையது. தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. – சொற் பிறப்பியல் அறிஞர் ஞா.தேவநேயப் பாவாணர் : தமிழ் வரலாறு

வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்

    உள்படுதலாவது அணுக்கமாதல். உலக வழக்கு நோக்கின், வள்ளுவரென்பார் வழிவழிகணிய (சோதிட)த் தொழில் செய்து வரும் தூய தமிழ்க் குலத்தாராவர். கணியத்திற்கு இன்றியமையாதது சிறந்த கணித அறிவு. கணித அறிவிற்கு இன்றியமையாது வேண்டுவது நுண்மாண் நுழைபுலம் என்னும் கூர்மதி. வள் =கூர்மை வள்ளுவன் = கூர்மதியன்.   பண்டைத் தமிழகத்திற் பொது மக்களும் புரவலரும் நாளும் வேளையும் பார்த்தே எவ்வினையையும் செய்து வந்தமையின் பட்டத்து யானை மீதேறி அரசன் கட்டளைகளைப் பறையறைந்து நகர மக்கட்கு அறிவித்த அரசியல் விளம்பர அதிகாரியும் வள்ளுவக் குடியைச்…

வள்ளுவர் குலவினம் – பேராசிரியர் ஞா.தேவநேயப்பாவாணர்

  இவ்வுலகத்தினர் எல்லாரும் இருமைப் பயனும் எய்தி இன்புறுமாறு. எக்காலத்திற்கும் எந்நாட்டிற்கும் ஏற்றவாறு. வாழ்க்கைக்கு வழி வகுத்து அதில் நடந்தும் காட்டிய வள்ளுவர் தமிழ்ப் புலவருள் தலையாயார் என்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்த முடிவாம்.   இத்தகைய தலைமை சான்ற வள்ளுவரை, வேண்டுமென்றே ஆரிய வழியினராகக் காட்ட வேண்டி, பிராமணத் தந்தைக்குப் பிறந்தவராகக் கூறுவது ஒருசார் புறத் தமிழர் மரபு. இனி, இதற்கு எதிராக அவரை உயர்த்திக் காட்டுதற் பொருட்டு உண்மைக்கு மாறாய் உயர்வாகக் கருதப் பெறுகின்ற ஒரு குலத்தினராகக் கூறுவது, ஒருசார் அகத்தமிழர் மரபு….