ஆலைத் தொழிலாளி – பாவேந்தர் பாரதிதாசன்

ஆலையின் சங்கேநீ ஊதாயோ? மணி ஐந்தான பின்னும் பஞ்சாலையின்… காலைமுதல் அவர் நெஞ்சம் கொதிக்கவே, வேலை செய்தாரேஎன் வீட்டை மிதிக்கவே ஆலையின் சங்கே…. மேலைத் திசைதனில் வெய்யிலும் சாய்ந்ததே வீதி பார்த்திருந்தஎன் கண்ணும் ஓய்ந்ததே மேலும் அவர்சொல் ஒவ்வொன்றும் இன்பம் வாய்ந்ததே விண்ணைப் பிளக்கும்உன் தொண்டையேன் காய்ந்ததே ஆலையின் சங்கே… குளிக்க ஒருநாழிகை யாகிலும் கழியும் குந்திப்பேச இரு நாழிகை ஒழியும் விளைத்த உணவிற்கொஞ்ச நேரமும் அழியும் வெள்ளி முளைக்குமட்டும் காதல் தேன் பொழியும் ஆலையின் சங்கே…

ஓவியக்காரன் – பாவேந்தர் பாரதிதாசன்

ஓவியம் வரைந்தான்-அவன் தன் உளத்தினை வரைந்தான்! ஒல்லிஇடை எழில் முல்லை நகை இரு வில்லைநிகர் நுதல் செல்வியை வைத்தே ஓவியம் வரைந்தான்! கூவும் குயில்தனைக் கூவா திருத்திக் கூந்தல் சரிந்ததென் றேந்தித் திருத்தி மாவின் வடுப்போன்ற கண்ணை வருத்தி வஞ்சியின் நெஞ்சத்தைத் தன்பாற் பொருத்தித் தேவை எழுதுகோல் வண்ணம் நனைத்தே தீர்ந்தது தீர்ந்தது சாய்ந்திடேல் என்றே ஓவியம் வரைந்தான்! காதலைக் கண்ணிலே வை! என்று சொல்வான் கணவ னாகஎன்னை எண்ணென்று சொல்வான் ஈதல்ல இவ்வாறு நில்லென்று சொல்வான் இதழினில் மின்னலை ஏற்றென்று சொல்வான் கோதை…

சுண்ணாம்பிடிக்கும் பெண்கள் – பாவேந்தர் பாரதிதாசன்

மந்தையின் மாடு திரும்பையிலே-அவள் மாமன் வரும் அந்தி நேரத்திலே குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள் கூட இருந்தாரையும் மறந்தாள்! தொந்தி மறைத்திட வேட்டிகட்டி-அவன் துாக்கி வந்தானொரு வெல்லக்கட்டி இந்தா எனக் கொடுத் திட்டாண்டி-அவன் எட்டு ஒரே முத்தம் இட்டாண்டி! கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்-அவன் கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள் தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்-அவன் தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள் கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக் கோடை படுத்திடும் நாளில்? என்றாள் தொட்டியின் தண்ணீர் கொதிக்கு தென்றான்-.நீ தொட்ட இடத்தில் சிலிர்க்கு…

குறவர் – பாவேந்தர் பாரதிதாசன்

காடைக் காரக் குறவன் வந்து பாடப் பாடக் குறத்தி தான் கூடக் கூடப் பாடி ஆடிக் குலுங்கக் குலுங்கச் சிரித்தனள் சாடச் சாட ஒருபுறப் பறை தக தக வென் றாடினாள் போடப் போடப் புதுப் புதுக்கை புதுப் புதுக்கண் காட்டினாள் ஓடிச் சென்று மயிலைப் போல ஒதுங்கி நிலையில் நிமிர்ந்துமே மூடி மலர்க்கை திறந்து வாங்கி முறிப்பும் முத்தமும் குறித்தனள் தேடத்தேடக் கிடைப்ப துண்டோ சிறுத்த இடுப்பில் நொடிப்பு கள் ஈடுபட்டது நேரில் முத்தமிழ் ஏழை மக்களின் வாழ்விலே!

பூக்காரி – பாவேந்தர் பாரதிதாசன்

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்! பார்த்துப் பறித்த தாமரைப்பூத் தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன் பூத்த முகத் தாமரையாள் புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து….. தேவையடி தாமரை இதழ் என்றேன் தேனொழுகும் வாயிதழ்மலர் ஆகின்றாள்-ஒரு பூவைக் காட்டிப் சேர்சொல் என்றேன் பூவை “என்பேர் பூவை” என்றாள்! ஆவல் அற்றவன் போல் நடந்தேன் அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து…. காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து – பலர் கண்பட வாடிய மருக்கொழுந்து நீ…

கூடைமுறம் கட்டுவோர் – பாவேந்தர் பாரதிதாசன்

கசங்கு சீவடி பரம்பு சொற்றடி கைவேளை முடித் திடலாம்-நம் பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால் பழயபைக் கொடுத் திடலாம் பிசைந்து வைத்துள மாவும்தேனும் பீரக்கங் கொடியின் ஓரம்-அந்த உசந்த பானை திறந்து கரடி உருட்டிடும் இந்த நேரம் கூடைமுறங்கள் முடித்து விட்டேன் காடை இறக்கை போலே-இனி மூடுதட்டும் குழந்தை மூச்சிலும் முடிப்பதுதான் வேலை காடுவெட்டவும் உதவி யில்லாக் கழிப்புக் கத்தியைத் தீட்டி-நீ ஏடுபத்தாய் மூங்கில் பிளக்க எழுந்திரு கண்ணாட்டி சோடியாக நா மிருவர் கூடி உழைக்கும்போது-நம் ஓடும்நரம்பில் உயிர் நடப்பதை உரைத்திட முடியாது பாடி…