ஆனந்தமாகிறாள் – ஆ.செந்திவேலு

ஆனந்தமாகிறாள்   பல் வரிசை தப்பினது அவளுக்கு மிக அழகாகவே அமைந்து போயிருந்தது. இவளை மாதிரித் ‘தெத்துப்பல்’தான் அந்தப் புகழ்மிகு திரைப்பட நடிகைக்கும் கூட தனிப்பட்ட  தன்மையாய் அமைந்துள்ளது என எண்ணிக் கொண்டவன் அதை நேரிடையாய் அவளிடமே சொன்னதும் பெரிய கலவரமாகித்தான் போனது. இருந்தும் அப்போது அதை  மகிழ்ச்சியாகவே எதிர் கொண்டவன் இப்போது எல்லாம்  நிரம்பவும் மாறித்தான் போயிருந்தான். நந்தினி !   ஆனந்தனின் வம்புக்கு ஆளானவள், ஆசைப்பட்டவள். இப்போது அவள் எதிராய் நடந்து வந்தாள் என்றால் பார்வையைத் திருப்பிக் கொள்வது அவன் வழக்கமாகவே ஆகியிருந்தது….

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் துயரச்சூழலில் உள்ளனவோ!   பொதுவாக நாம் ஒருவரை எப்பொழுது நேரில் சென்று ஆறுதல் சொல்வோம்? அவர் தோல்வியைச் சந்தித்தால், அவர் வருத்தத்தில் இருந்தால், அவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவர் நேர்ச்சியில்(விபத்தில்) சிக்கியிருந்தால், தொழிலில் எதிர்பாராச் சரிவைக் கண்டிருந்தால், இத்தகைய துன்பத்துயரத்தில் மூழ்கியிருந்தால், அவருக்கு ஆறுதல் தரவும் நம்பிக்கை தரவும், உங்கள் பக்கம் இருக்கிறோம், கவலற்க எனச் சொல்வதற்காக  நேரில் சென்று தேறுதல் சொல்வதுதானே வழக்கம்.   ஒருவருக்கு ஒருவர் மற்றொருவருக்குப் பணஉதவி போன்ற ஏதேனும் உதவி செய்தால், உதவி பெறுபவர்தானே உதவி வழங்குநரை…

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது – நந்தினி நேர்காணல்

    குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே அவ்வப்போது சில அரசியல் தலைவர்கள் அறிக்கைகள் வெளியிட்டு, ஒன்றிரண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தியதோடு சரி, அதைத் தாண்டி கொஞ்சம் நீளமாய் நடையாய் நடந்தும் பார்த்தாயிற்று. குடிகாரர்களின் அழுக்குக் கால்களில் விழுந்து கெஞ்சிப் பார்த்தார் சசி பெருமாள். உண்ணா நோன்பு இருந்தார். பழச்சாறு…

ஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக! வேண்டா இரட்டை அளவுகோல்!

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள ஈழத்தமிழர்க்கான சிறப்பு முகாமில் உள்ள நந்தினி என்பவர் 12 ஆம்வகுப்பில் 1170 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மருத்துவக் கல்விக்கான தகைவுமதிப்பெண் (cut off mark) 197.50 பெற்றுள்ளார். கலந்தாய்விற்கு விண்ணப்பித்தும் இவருக்கு அழைப்பு வரவில்லை. மருத்துவக்கல்விஇயக்கக அதிகாரிகள் ”இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். ‘இலங்கை அகதிகள் முகாமில்’ வசிப்பவர்கள் மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது” என்று தெரிவித்துள்ளனர். ஈழத்தமிழர்கள் நம்மிடம் அடைக்கலம் தேடி வந்தவர்கள். அடைக்கலமாக வந்தவர்களை நம் உயிரினும் மேலாகக் காக்க…

வெல்வீர் இனி… – புதுவைத் தமிழ்நெஞ்சன்

  மதுவிலக்கு மாணவப் போராளிகள் நந்தினி, சோதிமணி….. தமிழகத்தைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடு – அன்றே தலைநிமிர்ந்து தன்மானத்தோடு நிற்கும் தமிழ்நாடு மதுக்கடையை மூடாவிட்டால் நாட்டை விட்டே ஓடு – நீ மக்களுக்குச் செய்கின்றாய் இன்றுவரை பெருங்கேடு மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது – என்று விளம்பரம் செய்து மதுவிற்பது கேடானது தமிழினத்தைச் சிந்திக்காது செய்வதற்கே மதுபோதை- அடடா திராவிடம் காட்டுகின்றது அறிவழிக்கும் தீயபாதை சிந்தனைக்கு வைக்கின்றார் மதுவாலே வேட்டு – தமிழா சிந்தித்து தெளிந்து போடடா கடைக்குப் பூட்டு மானமுள்ள தமிழனென்று உலகிற்குக்…

மதுக்கடைகளை மூடுமாறு முதல்வர் வீடுமுன் அறப்போர்! – நந்தினி அறிவிப்பு

“நம்மை வீழ்த்தி என்றும் அடிமைகளாக மாற்றுவதற்காகச் சூழ்ச்சிக்காரர்கள் தீட்டிய சதியால் கொண்டுவரப்பட்ட மதுக்கடைகளை முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற உணர்வு தமிழகம் முழுவதும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கிவிட்டது. இந்த நெருப்பை ஆட்சியாளர்களால் அணைத்துவிட முடியாது. அரசின் மதுக்கடைகளுக்கு முடிவுகட்டும் நேரம் நெருங்கிவிட்டது. அதற்கான இறுதிப் போர்தான் 24.12.2013 அன்று காலை 9 மணிமுதல் முதல்வர் செயலலிதா அவர்களின் போயசு தோட்டம் வீட்டின் முன்பாகத் தொடங்கவுள்ள காலவரையற்ற உண்ணா நோன்பு அறப்போர். அனைவரும் இந்த அறப்போரில் பங்கேற்க வாருங்கள்.துணிவும் வீரமும் மிக்க இளைஞர்களே! இளைய தலைமுறை…