(திருக்குறள் அறுசொல் உரை – 104 உழவு தொடர்ச்சி) திருக்குறள் அறுசொல் உரை 02. பொருள் பால் 13. குடி இயல் அதிகாரம் 105. நல்குரவு உணவு,உடை, உறைவிடம் போன்றவை எதுவும் இல்லாத ஏழ்மைநிலை. இன்மையின் இன்னாத(து) யா(து)….?எனின், இன்மையின்       இன்மையே, இன்னா தது. ஏழ்மையைவிடக், கொடிது யாது….? ஏழ்மையே எழ்மையினும் கொடிது.   இன்மை எனஒரு பாவி, மறுமையும்,       இன்மையும் இன்றி வரும்.      வறுமைக் கொடும்பாவி, எப்பிறப்பிலும் தொடரும்; தொடர்ந்து வருத்தும்.   தொல்வரவும், தோலும் கெடுக்கும், தொகைஆக,     …