இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு – சீமான்

இலக்குவனார் நினைவுநாளில் தமிழர் கோவில்களில், தாய்த்தமிழில் வழிபாடு “அன்னைத் தமிழில் அருச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை அறிவித்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோவில்களிலும் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்ய ஏற்பாடு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாம் அறிந்த வரை இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. நாடு “தமிழ்”நாடு. ஆனால், தமிழில் வழிபாடு செய்யப் போராட வேண்டிய நிலையில் தான் கடந்த 55-ஆண்டுக் காலத் திராவிட அரசுகள் இயங்கி இருக்கின்றன….

இலக்குவனார் ஆராய்ச்சி நூலகம் – நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை

தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் வாழ்ந்த இல்லத்தை நினைவில்லம் – தமிழ் ஆராய்ச்சி மாணவர்கள் படிப்பகம் ஆக உருவாக்க நடவடிக்கை எடுப்போம்!- நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதித் தேர்தல் அறிக்கை 

ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? – சீமான் கண்டனம்!

ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் மீது தாக்குதல் நடத்துவதா? அகதிகள் என்று சொல்லி அத்துமீறுவதா? : சீமான் கண்டனம்!   மண்டபம் முகாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் தாக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:     இராமேசுவரம், மண்டபம் முகாமில் வாழும் ஈழ உறவுகள் காவல்துறையினரால் தாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த மனவேதனையையும், அளவிட முடியா பெருங்கோபத்தையும் தருகிறது. போரில் உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தாய்நிலத்தைப் பிரிந்து நிராதரவற்றவர்களாய் தமிழகத்திற்கு வந்திருக்கும் ஈழ உறவுகள் மீதான தாக்குதலை மனச்சான்றுள்ள எவராலும்…

மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். – சீமான்

மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்.  ச.நே.ப. மாணவர் முத்துக்கிருட்டிணன் மரணத்திற்கு உரிய நீதி உசாவல் வேண்டும்.  – சீமான் வலியுறுத்தல் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  ‘தற்போதைய வரலாறு’ பாடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த சேலம் மாணவர் முத்துக்கிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினையும், ஆழ்ந்த மனவேதனையினையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத் துயரத்தில் நாம் தமிழர் கட்சி…

உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்தைப் பழிவாங்குவதா? – சீமான்

உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்திப் பழிவாங்குவதா?  – மத்திய அரசுக்குச் சீமான் கண்டனம்!  இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஒட்டுமொத்தத் தமிழகமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சற்றும் சலனமில்லாது தமிழர்களுக்கு இன்னொரு வஞ்சகத்தை இழைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. மத்திய அரசின் உணவுப்பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தமிழகமும், கேரளாவும் மட்டும்தான் அதனை ஏற்க மறுத்தன. இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு…

திராவிடம் என்பது ஆரியல்லார் என்பதன் குறியீடு! – குளத்தூர் மணி

திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான்! ‘நாம் தமிழர் கட்சி’ முன் வைக்கும் கருத்துகள் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் குளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள மறுமொழிகள். பகலவன்: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதைப்பற்றிய நிறை குறையைப் பகிர வேண்டுகிறேன்! குளத்தூர் மணி: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம். பகலவன்: ஆந்திர, கருநாடக, கேரள மாநிலத்தவர்கள் தங்களைத் திராவிடர் என்று அடையாளப்படுத்துவது…

தேர்தல் நிதி வேண்டுகிறது நாம் தமிழர் கட்சி!

தேர்தல் நிதி   வேண்டுகிறது நாம் தமிழர் கட்சி! நாம்தமிழர் கட்சிக்கு நிதியுதவ விரும்புவோர்அறிவதற்கு: நாம்தமிழர் தேர்தல் நிதி வங்கி :  இந்தியன் ஓவர்சீசு வங்கி / Indian Overseas Bank இராசாசி பவன், பெசண்டு நகர் கிளை , சென்னை / Rajaji Bhavan. Besant Nagar. Chennai. கணக்கின் பெயர் : நாம்தமிழர் கட்சி / Naam tamizhar katche கணக்கு எண் :         168702000000150 குறியெண் :               IOBA000189

“எங்கள் தேசம்” இதழின் வெளியீட்டு விழா

மாசி 29, 2046 / 13-03-15  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானை ஆசிரியராகக் கொண்டு இயங்கும் எங்கள் தேசம் மாதமிருமுறை இதழின் வெளியீட்டு விழா,  மாசி 29, 2046 / 13-03-15 அன்று சென்னை, வடபழனி, கார்த்திக்குத் தோட்டம் ஆர்.கே.வி.அரங்கத்தில் நடந்தது. முதல் இதழை புரட்சித்தமிழன் சத்யராசு வெளியிட, எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்.